Bronchiolitis Home Remedies: மூச்சுக்குழாய் அழற்சியால் அவதியா? வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்?

  • SHARE
  • FOLLOW
Bronchiolitis Home Remedies: மூச்சுக்குழாய் அழற்சியால் அவதியா? வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்?

குறைந்த கால மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையை சில இயற்கையான தீர்வுகள் மூலம், சில வாரங்களிலேயே குணப்படுத்தலாம். எனினும், இவை தொடர்ந்து நீடித்தால் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியாக இருப்பின், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். குறைந்த கால மூச்சுக்குழாய் அழற்சியை நீக்க உதவும் சில இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

மூச்சுக்குழாய் அழற்சிக்கான வீட்டு வைத்தியம்

தேன் மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை மற்றும் தேன் இரண்டுமே தொண்டை வறட்சி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. தேனில் கிருமி எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சளியை நீக்க உதவும் சிறந்த மருந்தாகும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் இந்த நீரில் பாதி எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து கொள்ளவும்.
  • பிறகு, அடுப்பில் இருந்து எலுமிச்சை கலந்த நீரை எடுத்து சற்று ஆறிய பிறகு அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருக வேண்டும்.
  • இவ்வாறு ஒரு நாளில் மூன்று முறை இதைப் பின்பற்றலாம்.

சூடான சூப்

தொண்டை வறட்சியை நீக்க மற்றும் இருமலைக் குறைக்க சூடான சூப் வகைகளைப் பருகலாம்.

குறிப்பாக குளிர்காலத்தில் சூப் வகைகளை எடுத்துக் கொள்வது மூச்சுக்குழாய் அழற்சியை பெருமளவில் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Neck Remedies: கழுத்துப் பகுதி கருப்பா இருக்கா? தேனை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

இஞ்சி

மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறிகளை நீக்க இஞ்சி சிறந்த தேர்வாகும். இதில் ஜிஞ்சிரால் என்ற கூறு நிறைந்துள்லது. இவற்றில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சுவாச தொற்று பாதிப்புகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இஞ்சியை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, இஞ்சி சேர்த்து தயாரிக்கப்பட்ட இஞ்சி தேநீர் பருகலாம் அல்லது இஞ்சியை சமைக்காமல் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். மேலும், உணவில் அடிக்கடி இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பு நீர் கொப்பளிப்பது

இது தொண்டை வறட்சியின் அறிகுறிகளை நீக்க உதவும் சிறந்த தீர்வாகும். உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது, எரிச்சலை உண்டாக்கும் சளி உடைக்கப்பட்டு வெளியேறுகிறது. மேலும் கரகரப்பான தொண்டை பிரச்சனைக்கும் உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது.

  • ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கரைக்கவும்.
  • பின் சிறிது சிறிதாக தொண்டையில் படும் படி இந்த நீரை வாயில் ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும்.
  • ஒரு நாளில் பலமுறை இதைச் செய்து வருவதால் விரைவில் நல்ல தீர்வைப் பெறலாம்.

பூண்டு

இதில் உள்ள அல்லிசின் என்ற கூற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கிருமி எதிர்ப்பு பண்புகள், வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது.

இதற்கு தோல் உரித்த பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்

மஞ்சள்

இதில் குர்குமின் நிறைந்துள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நெஞ்சு சளியை நீக்க உதவுகிறது.

இவை உடல் வலியைப் போக்கவும், சுவாச மேம்பாட்டிற்கும் உதவுகிறது. மஞ்சள் கலந்து தயாரிக்கப்பட்ட தேநீரைப் பருகலாம். மஞ்சள் சேர்த்த உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

நீராவி நுகர்தல்

சுவாசப்பாதையில் உள்ள சளி நுகர்வை அகற்ற நீராவி நுகர்தல் செய்யலாம். இவை எளிதான முறையில் சளியை உடலில் இருந்து வெளியேற்றும் சிறந்த முறையாகும். சூடான நீர் கொண்டு நீராவி பிடிப்பது, தசைகளை தளர்ச்சி பெற வைக்கிறது.

  • முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தலையைத் துண்டால் மூடிக் கொண்டு கிண்ணத்தில் உள்ள நீர் மேல் முகம் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அந்த நீரில் வெளியேறும் ஆவியை நுகர வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை நுகர்வதன் மூலம் நல்ல தீர்வைப் பெறலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

இது தவிர, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறிகளை விரைவில் நிர்வகிக்க உதவும்.

அதன் படி, போதிய தூக்கம் பெறுவது, மது மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்தல், மாசுபட்ட காற்றை நுகராமல் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை அடங்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

Image Source: Freepik

Read Next

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த 3 இலைகள் போதும்!

Disclaimer