How to recover from stomach upset: இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அவ்வாறு பெரும்பாலானோர் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக வயிற்று காய்ச்சல் அமைகிறது. இது மருத்துவ மொழியில் வைரஸ் இரைப்பை குடல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, வயிறு மற்றும் குடல் பகுதிகள் பாதிக்கப்படுகிறது. இதனால், நீர் வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல் அல்லது வாந்தி போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். சில நேரங்களில் காய்ச்சல் ஏற்படுவது வயிற்றுக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.
இந்த பிரச்சனைகள் பொதுவாக குறுகிய காலம் நீடிக்கக் கூடியதாகும். ஆனால், இது மிகவும் அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நபர்கள், அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் தொற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது பொதுவாக சில நாள்கள் நீடிக்கத் தொடங்கும் என்றாலும், அதன் அறிகுறிகள் மெதுவாகக் குறையத் தொடங்கும். எனினும், இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபட சில எளிய வைத்தியங்கள் உதவுகின்றன. இவை அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கவும், விரைவான குணமடையவும் வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆம்லா சாற்றில் இந்த ஒரு பொருளைச் சேர்த்து வெறும் வயிற்றில் குடிச்சி பாருங்க! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
வயிற்று பிரச்சனையை விரைவில் குணமாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
சரியாக சாப்பிடுவது
பொதுவாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவுகளைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அதன் படி, குடலின் செரிமான அமைப்புக்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் அறிகுறிகள் மேம்படும் பட்சத்தில் அரிசி, வாழைப்பழங்கள் போன்ற சாதுவான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தொடங்கலாம்.
அதே சமயம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட உணவில் ஏராளமான புரோபயாடிக்குகளைச் சேர்க்க வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் நன்றாக உணரும் வரை காரமான அல்லது கனமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, வயிற்றுப்போக்கைக் குறைக்க கூடுதல் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதையும் தவிர்ப்பது அவசியம்.
முக்கிய கட்டுரைகள்
ஓய்வெடுப்பது
பொதுவாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பட்சத்தில் உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை உணரலாம். இந்நிலையில், போதுமான தூக்கம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இது உடல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்கிறது. அதே சமயம், தூக்கமின்மை காரணமாக உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பாதிக்கப்படலாம். இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது. நல்ல மற்றும் சீரான தூக்கத்தின் உதவியுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதுடன் உடல் வைரஸை எதிர்த்துப் போராட ஆதரிக்கலாம்.
பால் மற்றும் காஃபின் தவிர்ப்பது
பால், காஃபின் போன்ற இரண்டுமே செரிமான அமைப்புக்கு தொந்தரவாக இருக்கலாம். இது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி, அதன் அறிகுறிகளை மேலும் மோசமாக்குகிறது. பால், குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அதே போல, காஃபின் அருந்துவது குடலைத் தூண்டி, வயிற்றுப்போக்கு அல்லது இரைப்பை ரிஃப்ளக்ஸ் போன்றவற்றை மோசமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காபி குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும் கவலையா? நிபுணர் சொன்ன சூப்பர் டிப்ஸ் இதோ
நன்கு நீரேற்றமாக இருப்பது
அதிகளவு நீரேற்றமாக இருப்பது உடல் இழந்த திரவங்களை ஈடுசெய்ய உதவுகிறது. மேலும், இது உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க உதவுகிறது. இது வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மூலம் முக்கியமான உடல் திரவங்களை இழப்பதால், குடிநீர், தெளிவான குழம்புகள் மற்றும் வாய்வழி நீரேற்றக் கரைசல்கள் போன்றவை மிகவும் உதவியாக இருக்கும். உடலை நன்கு நீரேற்றமாக வைப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
சுய மருந்து செய்வதைத் தவிர்ப்பது
குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கைப் போக்க பல்வேறு மருந்துகளை சுயமாகவே எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்ததுண்டா? எனினும், பாதுகாப்பான சிகிச்சைக்காக ஒரு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். இதன் மூலம் குடல் சம்பந்தமான பிரச்சனைகாய்த் தவிர்க்கலாம்.
இது போன்ற எளிய வழிமுறைகளின் உதவியுடன் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். எனினும், இதன் அறிகுறிகள் வழக்கத்தை விட நீண்ட காலம் நீடித்தால் அல்லது கடுமையான நீரிழப்பு, அதிக காய்ச்சல் அல்லது மலத்தில் இரத்தம் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தினமும் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பவர்களா நீங்க? இது தெரியாம குடிக்காதீங்க
Image Source: Freepik