காபி குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும் கவலையா? நிபுணர் சொன்ன சூப்பர் டிப்ஸ் இதோ

What happens if I only drink coffee and no water: காபி குடிப்பது ஒருவருக்கு நீரிழப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனினும், நீரிழப்பு காரணமாக காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு ஒரு சிறந்த தீர்வாக நிபுணர் பூஜா மகிஜா அவர்கள் காபி குடிப்பதன் நீரிழப்பைத் தவிர்க்க பகிர்ந்துரைத்த சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
காபி குடிப்பதால் நீரிழப்பு ஏற்படும் கவலையா? நிபுணர் சொன்ன சூப்பர் டிப்ஸ் இதோ

Why do I get so dehydrated when I drink coffee: நம்மில் பலரும் தினமும் காலையில் டீ, காபி அருந்துவதையே வழக்கமாக்கிக் கொண்டு வருகிறோம். இது அவர்களுக்கு ஒரு தினசரி சடங்காகக் கருதப்படுகிறது. இது நாளைத் தொடங்குவதற்கு அரவணைப்பையும் சக்தியையும் வழங்குகிறது எனக் கருதுகின்றனர். ஒருபுறம், காபி அருந்துவது எடையிழப்புக்கு உதவக்கூடிய பானமாகவும் நடைமுறையில் உள்ளது. ஆனால், மறுபுறம் இது சில உடல் பிரச்சனைகளையும் கொண்டிருக்கலாம். ஆம். காபி குடிப்பது காலையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருப்பினும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சில விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், வெறும் வயிற்றில் காபி அருந்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கலாம். மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது காபி அருந்துவது செழுமையான நறுமணமும், துடிப்பான சுவையுடன், மென்மையான ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில், இதன் அதிகப்படியான நுகர்வு நீரிழப்புக்கு வழிவகுக்கலாம். நீரிழப்புக்காக காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. காபி குடிப்பதன் மூலம் நீரேற்றமும் அடைய ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom coffee: மஸ்ரூம் காஃபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

காபி குடிப்பதால் நீரிழப்பு ஏற்படுமா?

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா அவர்களின் கூற்றுப்படி, காபி நீர்ச்சத்தை குறைக்கக்கூடிய ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. ஆனால் யாவரும் காபியை விரும்புபவர்களே. காபி அருந்துவது சிறுநீரில் இழக்கப்படும் சோடியம் மற்றும் குளோரைட்டின் இழப்பை அதிகரிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு கப் காபி, 400 முதல் 450 மில்லிகிராம், இரண்டு கப் காபி, சுமார் 600 மில்லிகிராம் என்ற அளவில் சிறுநீரில் இருந்து சோடியத்தின் கூடுதல் இழப்பு ஏற்படுவதகக் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், காஃபின் வியர்வையிலிருந்து சோடியத்தின் இழப்பை 15 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே இது நம் உடலிலிருந்து எலக்ட்ரோலைட் களை வெளியேற்றுவதை உறுதி செய்கிறது.

நீரிழப்பைத் தக்க வைக்க செய்ய வேண்டியவை

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா அவர்கள், காபி குடிக்கும் போது நீரிழப்பு ஏற்படுவதைத் தக்கவைக்கவும், உடலை நீரேற்றமாக வைக்கவும் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

உப்பு சேர்த்த நீர் குடிப்பது

காபி குடிப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு சோடியம் நிறைந்த உப்பு சேர்த்த நீரைக் குடிப்பது, உடல் நீரிழப்புக்கு முன்பே நீரேற்றம் பெறுவதை உறுதி செய்கிறது. இதன் மூலம் நீரேற்றமாக இருக்கலாம்.

காபி குடிப்பதில் கவனம்

உடலின் நீரிழப்பைத் தடுப்பதற்கான கூடுதல் வழிகளை நிபுணர் பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்த காபி நுகர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதன் படி, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2-3 கப் காபியை மட்டும் அருந்த வேண்டும். ஏனெனில், அதிகளவிலான காபி உள்ளடக்கம் நீரிழப்புக்கு வழிவகுக்கலாம்.

வெறும் வயிற்றில் தவிர்ப்பது

காலை எழுந்ததும் முதலில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நாள் முழுவதும் உடல் உகந்த நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த எளிய பழக்கத்தின் உதவியுடன், உடலில் திரவ சமநிலையைப் பராமரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coffee and Cholesterol: அதிகமாக காஃபி குடிப்பது கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகரிக்குமா?

இவை உங்களுக்குப் பிடித்த பானத்தை எந்த கவலையும் இல்லாமல் சுவைக்க அனுமதிக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், இதில் ராக் சால்ட், பிங்க் சால்ட் போன்ற ஆரோக்கியமான உப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

வெறும் வயிற்றில் காபி குடிப்பதன் தீமைகள்

கூடுதலாக, இதில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் நீரிழப்பைத் தவிர வேறு என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

  • காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது செரிமான மண்டலத்தை சீர்குலைக்கலாம். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்குகிறது. மேலும், இது இரைப்பை அமிலத்தின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால், அஜீரணம், வயிற்று உப்புசம், குமட்டல் போன்றவை ஏற்படலாம்.
  • வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் கார்டிசோல் ஹார்மோனின் அளவை அதிகரிக்கச் செய்யலாம். இதனால், மாதவிடாய் பிரச்சனை, ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது. இது தவிர, அதிகரிக்கும் மன அழுத்தத்தின் காரணமாக எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.
  • காபியில் உள்ள காஃபின் இரத்த சர்க்கரையை பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்கலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Black coffee benefits: காலையில் எழுந்ததும் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

எடை இழப்பு முதல்.. சீரான செரிமானம் வரை.. மஞ்சள் டிராகன் பழத்தின் நன்மைகள் இங்கே..

Disclaimer