Black coffee benefits: காலையில் எழுந்ததும் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

Benefits of consuming black coffee first thing in the morning: காலையில் எழுந்ததும் காபி அருந்துவது பலரின் விருப்பமாகும். எனினும், காபிக்கு மாற்றாக பிளாக் காபி அருந்துவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் காலையில் எழுந்ததும் பிளாக் காபி குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Black coffee benefits: காலையில் எழுந்ததும் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?


Reasons to have black coffee in the morning: இன்று பலரும் தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ போன்ற பானங்களை அருந்துவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். ஆனால், இது உண்மையில் உங்களுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கிறீர்களா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி போன்ற பானங்களை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். எனினும், காபி அதன் மகத்தான பிரபலத்தின் காரணமாக பொதுவாக உட்கொள்ளப்படுகிறது. இதில் நிறைந்த காஃபின் ஆனது மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

காபியை பால், கிரீம், சர்க்கரை போன்றவை சேர்க்கப்படாமல் காய்ச்சப்படும் காபியானது கருப்பு காபி என்றழைக்கப்படுகிறது. இது ஒரு பிரபலமான மற்றும் சுவையான காபி பானமாகும். கூடுதலாக, கருப்பு காபி அருந்துவது எடையிழப்பு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும், அல்சைமர் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நிலைகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இதில் காலையில் முதலில் கருப்பு காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

காலையில் கருப்பு காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எடையிழப்பை ஊக்குவிப்பதற்கு

பொதுவாக, காபி என்பது கலோரிகள் இல்லாத பானமாகும். இதை உட்கொள்வது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, காபியில் நிறைந்துள்ள காஃபின் ஆனது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், பசியைக் குறைத்து உடல் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க

கருப்பு காபி அருந்துவதால் நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பை திறம்பட குறைக்கலாம் என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் காபி அருந்தும் போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக உடல் அதிக இன்சுலின் உற்பத்தி செய்யக்கூடும். இதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் கருப்பு காபி நன்மை பயக்கும்.

வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு

காபி ஒரு சிறுநீர் பெருக்கி என்பதால், அதை அருந்தும் போது, சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். காபி குடித்த பின், சிறுநீர் கழிப்பது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இவை உடலிலிருந்து பாக்டீரியாக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க

நமது உடலின் ஆரோக்கியத்தை அமைதியாகப் பராமரிக்கும் ஒரு அத்தியாவசிய உறுப்பாக கல்லீரல் அமைகிறது. கருப்பு காபியானது இரத்தத்தில் உள்ள ஆபத்தான கல்லீரல் நொதிகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. சில ஆராய்ச்சிகளில் காபி அருந்துவதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய், மற்றும் கல்லீரல் சிரோசிஸ் போன்றவற்றைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த

கருப்பு காபியில் வலுவான ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்குப் பெயர் பெற்றதாகும். மேலும் கருப்பு காபியில் வைட்டமின் பி2, பி3 மற்றும் பி5, மாங்கனீசு, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற வலுவான ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!

மன அழுத்தத்தைக் குறைக்க

காபி அருந்துவது நரம்பியல் அமைப்பைத் தூண்டுவதன் மூலம் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் தூக்கம், மனச்சோர்வு மற்றும் தனிமை உள்ளிட்ட மனச்சோர்வு உணர்வுகளைக் குறைக்க உதவும் மன அழுத்த எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. மேலும், இதை உட்கொள்வது பதட்டத்தைக் குறைத்து, நிம்மதியாக இருக்க உதவுகிறது. ஒரு கப் கருப்பு காபி அருந்துவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்.

நினைவாற்றலை அதிகரிக்க

கருப்பு காபி குடிப்பது நினைவாற்றலை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக வயதுக்கு ஏற்ப நமது அறிவாற்றல் திறன்கள் மோசமடைகிறது. இதனால் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட நினைவாற்றல் தொடர்பான கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனநிலையை மேம்படுத்த

கருப்பு காபி அருந்துவது நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இது டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற "மகிழ்ச்சியான இரசாயனங்கள்" வெளியீட்டை அதிகரிக்கிறது. இதன் மூலம் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க

சில ஆய்வுகளின் படி, கருப்பு காபி குடிப்பதால் பெருங்குடல், கல்லீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் காபியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.

இவ்வாறு பிளாக் காபியில் இது போன்ற ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. எனினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். ஏனெனில், கருப்பு காபியை அதிகளவு உட்கொள்வதால் பாதகமான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக அமிலத்தன்மை, அதிகரித்த மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Image Source: Freepik

Read Next

Defecation: அமர்ந்த உடன் மொத்த மலமும் வெளியேறி வயிறு சுத்தமாக ஒரேவொரு கொய்யாவை இப்படி சாப்பிடுங்க போதும்!

Disclaimer