Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Black Coffee Benefits: பிளாக் காபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

பிளாக் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பிளாக் காபி பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு சில வழிகளில் நன்மை தருகிறது.

ஆக்ஸிஜனேற்றிகள்

பிளாக் காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்றிகள் உடலை நோய்களின் அபாயத்திலிருந்து காப்பதுடன், ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga Before Sleep: உடல் எடை சட்டுனு குறைய இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்

உடல் செயல்திறனை அதிகரிக்க

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சிக்கு முன், இந்த பிளாக் காபி அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காபியில் உள்ள காஃபின், உடலில் அட்ரினலின் அளவை அதிகரித்து உடலுக்கு தற்காலிக ஊக்கத்தை வழங்குகிறது. இது உடற்பயிற்சியின் போது உடல் செயல்திறனை மேம்பாடு அடைய உதவுகிறது.

விழிப்புணர்வை அதிகரிக்க

பிளாக் காபி ஒரு இயற்கையான தூண்டுதலாகும். இதில் உள்ள காஃபினை உட்கொள்வது விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும், உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிகரித்து, அன்றைய பணிகளைச் சமாளிக்கத் தேவையான மன ஆற்றலை வழங்குகிறது.

நோய் அபாயத்தைக் குறைக்க

பிளாக் காபியை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு நியய், பார்கின்சன் நோய் மற்றும் இன்னும் சில வகையான புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பிளாக் காபியில் சர்க்கரை இல்லாமல் அருந்துவது நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga After Dinner: இரவில் நிம்மதியான உறக்கம் பெற வேண்டுமா? இந்த யோகாசனங்கள் செய்யுங்க

மனநிலை மேம்பாட்டிற்கு

பிளாக் காபியில் உள்ள காஃபின் மனநிலை மேம்பாட்டிற்கு உதவுகிறது. மனச்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. அதாவது காபியில் உள்ள காஃபின், நரம்பியல்கடத்திகளான செரோடோனின், டோபமைன் போன்றவற்றின் வெளியீட்டை அதிகரிப்பதன் மூலம் லேசான ஆண்டிடிரஸன்டாகச் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு பிளாக் காபி ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில், இது கிட்டத்தட்ட பூஜ்ஜிய கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே இது உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

மேற்கூறிய அனைத்தும் பிளாக் காபி தரும் ஆரோக்கிய நன்மைகளாகும். எனினும், இதனை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். அதிகப்படியான காஃபினை உட்கொள்வது தூக்கமின்மை, அமைதியின்மை, அதிகரித்த இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலத்திற்கேற்ப காபி உட்கொள்வதைச் சரி செய்வது முக்கியம். மிதமான அளவில் பிளாக் காபி உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Persimmon Fruit Benefits: பெர்சிமன் பழத்தின் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகள்!

Disclaimer