Doctor Verified

Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சந்திர நமஸ்காரத்தின் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BAMS) டாக்டர் கணேஷ் சௌத்ரி அவர்கள் எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் மென்மையான உடல், மன மற்றும் உணர்ச்சி மிகுந்த வாழ்வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

சந்திர நமஸ்காரம்

இனிமையான பண்புகளை நினைவு கூருவதற்காக சந்திரனை வணங்கி செய்யும் யோகா அமைப்புகளே சந்திர நமஸ்காரம் ஆகும். சூரிய நமஸ்காரம் போல் பல்வேறு யோகாசனங்களைக் கொண்டிருக்காமல், மென்மையான இயக்கங்களை கொண்டு சந்திர நமஸ்காரம் செய்யப்படுகிறது. இது உடலுக்கு அமைதி மற்றும் சமநிலை உணர்வை ஊக்குவிக்கிறது. இது பெரும்பாலும் மாலை நேரத்தில் செய்யப்படுகிறது.

சந்திர நமஸ்காரத்தின் ஆரோக்கிய நன்மைகள்

மாலை நேரங்களில் செய்யும் சந்திர நமஸ்காரம் உடல் நலத்திற்குத் தேவையான சில ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

சமநிலையான ஆற்றல்

சந்திரன் எவ்வாறு குளிர்ச்சி மற்றும் அமைதியுடன் இருப்பது போல, சந்திர நமஸ்காரம் உடலில் சமநிலையான ஆற்றலை தர உதவுகிறது. இது உடலின் அதிகப்படியான வெப்பத்தைக் கட்டுப்படுத்தி உடலைச் சுறுசுறுப்பாக வைக்கிறது. மேலும், மன அமைதி மற்றும் சமநிலை அடைவதை ஊக்குவிக்கிறது.

நெகிழ்வுத்தன்மை மற்றும் சிறந்த ஆரோக்கியம்

சந்திர நமஸ்காரத்தின் மூலம் உடலின் தசைகள் மற்றும் மூட்டுகளை மென்மையாக நீடிக்கலாம். இதன் மூலம் உடலில் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க முடியும். மேலும், வழக்கமான பயிற்சி செய்வதால் தசை இறுக்கம் ஏற்படுவதைத் தணித்து, உடலின் விரைப்பைக் குறைக்கிறது. இது உடல் முழுவதும் நெகிழ்ச்சித்தன்மையை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Padmasana: பத்மாசனம் தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

மன அழுத்தத்தைக் குறைக்க

சந்திர நமஸ்காரம் ஆழ்ந்த சுவாசத்துடன் தொடர்புடைய இயக்கம் ஆகும். இது தளர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகின்றன. இது பதற்றம் இல்லாத அமைதியான சூழலை உருவாக்குகிறது.

ஹார்மோன் சமநிலை

சந்திர நமஸ்காரம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, இவை ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதிலும், குறிப்பாக பெண்களில் மற்றும் ஒட்டு மொத்த ஹார்மோன் ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதாக அமைகிறது.

செரிமானம்

சந்திர நமஸ்கார நிலைகள், வயிற்று உறுப்புகளைத் தூண்டி, செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்கவும், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

சிறந்த தூக்கம்

சந்திர நமஸ்காரத்தின் அடிப்படைத் தன்மை நல்ல நிம்மதியான உறக்கத்தைத் தருவதாகும். குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது மாலை நேரங்களில் சந்திர நமஸ்காரம் செய்வதால் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். இது உடல் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைத் தருகிறது. இதன் மூலம், இரவு நேரங்களில் ஏற்படும் தூக்கக் கலக்கம், தூக்கமின்மை உள்ளிட்டவற்றில் இருந்து விடுபடலாம்.

சந்திர நமஸ்காரத்திற்கு முன் கவனிக்க வேண்டியவை

  • சந்திர நமஸ்காரம் செய்து கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு முன் சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
  • புதிதாக சந்திர நமஸ்காரம் செய்பவராக இருப்பின், சரியான மற்றும் தகுதி வாய்ந்த யோகா பயிற்றுவிப்பாளரிடமிருந்து கற்றுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
  • சந்திர நமஸ்காரம் செய்வதால் சுவாசம், உணர்வுகள், இரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது தியானத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

இவ்வாறு, சந்திர நமஸ்காரத்தை முறையாகச் செய்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்?

Image Source: Freepik

Read Next

Stamina Yoga: உங்கள் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்