Isabgol with curd benefits: இசப்கோலை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Can isabgol be taken with curd: சைலியம் உமி என்றழைக்கப்படும் இசப்கோல் பாரம்பரியமாக மருந்து வகையைச் சார்ந்ததாகும். இந்த இசப்கோலைத் தயிருடன் சேர்த்து உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் இசப்கோலுடன் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Isabgol with curd benefits: இசப்கோலை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Curd with isabgol health benefits: சில நேரங்களில் இந்தியாவில் பாரம்பரியமாக பாதுகாக்கப்படும் ஒரு மருந்தாகவே இசப்கோல் அமைகிறது. இது சைலியம் உமி என்றும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ஆஸ்ப் மற்றும் கோல் என்ற வார்த்தையானது குதிரைப் பூ என்று பொருள்படுகிறது. இசப்கோல் உமியில் உள்ள நார்ச்சத்துக்கள் சுமார் 70% கரையக்கூடியதாகும். அதே சமயம் 30% கரையாததாகும். இது போன்ற நம்பமுடியாத பல்வேறு சுகாதார நன்மைகளைக் கொண்ட இசப்கோலை தயிருடன் சேர்த்து உட்கொள்வது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

சைலியம் உமி (Isabgol)

சைலியம் உமி என்பது, பிளாண்டகோ ஓவாடா தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களைக் குறிக்கிறது. இசப்கோல் என்றழைக்கப்படும் சைலியம் உமி, ஒரு பசை மற்றும் எண்ணெய் நிறைந்த மலமிளக்கியாகும். இது நம் உடலுக்கு செரிமான மருந்தாக பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிளாண்டகோ ஓவாடா ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் முக்கியமாகக் காணப்படக்கூடிய நீண்ட மற்றும் குறுகிய இலைகளைக் கொண்ட மருத்துவ தாவரமாகும். இந்த மருத்துவ குணம் நிறைந்த சைலியம் உமியைத் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Curd Benefits: குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா.?

சைலியம் உமியுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடையிழப்புக்கு

எடையிழப்பை விரும்புவோர்க்கு பசியை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமாக ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில் இசப்கோல் எடுத்துக் கொள்வது முழுமையை அடைய உதவுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், குடல் சுத்திகரிப்புக்கும் உதவுகிறது. எடை இழக்கும்போது கொழுப்பை எரிப்பதன் விளைவாக உடல் நிறைய கழிவுப்பொருட்களை உருவாக்குவது போல் தெரியலாம்.

பச்சை உணவு நுகர்வு திடீரென அதிகரிப்பதால் மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது செரிமான அமைப்பில் சற்று சுமையை ஏற்படுத்துகிறது. எனவே ஆரோக்கியமாக உணர உடலிலிருந்து இந்த கழிவுகளை அகற்றுவது அவசியமாகும். தினமும் இசப்கோலை தயிருடன் எடுத்துக் கொள்வது எடையிழப்பை ஆதரிக்கிறது.

நீரிழிவு நோய்க்கு

இசப்கோலில் உள்ள பண்புகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இசப்கோல் செரிமானத்தின் போது வயிற்றில் ஒரு பிசுபிசுப்பான ஜெல்லை உருவாக்குவதால், சைமின் பாகுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்றில் ஓரளவு செரிமானம் செய்யப்படும் உணவு சைம் என்று அழைக்கப்படுகிறது. சைமின் அதிக பாகுத்தன்மையானது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் செரிமான நொதிகளுக்கு இடையிலான தொடர்புகளைக் குறைப்பதன் மூலம் செரிமான விகிதத்தை குறைக்கிறது.

கூடுதலாக இசப்கோல் குளுக்கோஸ் உறிஞ்சுவதை மெதுவாக்குவதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை திறம்பட குறைக்கிறது. இதனால், தயிருடன் இசப்கோலை எடுத்துக் கொள்வது உணவின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது. இது வகை 2 நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த

வயிற்றுப்போக்கு கடுமையான செரிமான அமைப்பு நோய்களில் ஒன்றாகும். இதிலிருந்து விடுபட இசப்கோல் மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு இசப்கோலில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களே காரணமாகும். அதன் படி, வயிற்றுப்போக்கிலிருந்து விடுபட 2 தேக்கரண்டி இசப்கோலை 3 தேக்கரண்டி அளவிலான தயிருடன் சேர்த்து தினமும் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். இதில் தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் வயிற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

இரத்த அழுத்தம், கொழுப்பைக் கட்டுப்படுத்த

ஆய்வு ஒன்றில், இசப்கோல் சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்துவது பிஎம்ஐ, இரத்த அழுத்தம், எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இசப்கோலில் நிறைந்த ஹைக்ரோஸ்கோபிக் பண்புகள் இரத்தக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது குடலில் ஒரு மெல்லிய தடையை உருவாக்கி, உணவில் இருந்து கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் திறம்படக் குறைக்கிறது.

மலச்சிக்கலை எளிதாக்க

இசப்கோலை தயிருடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை திறம்பட நிர்வகிக்கலாம். இதற்கு இசப்கோலில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்களே ஆகும். கூடுதலாக, சைலியம் உமியானது தண்ணீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்கிறது. எனவே இது மலத்தை மென்மையாகவும், எளிதாகவும் வெளியேற்றுகிறது. மேலும், இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கலை நிர்வகிக்க உதவுகிறது. இதன் லேசான மலமிளக்கி பண்புகள் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Curd Idli: தயிர் வடை சாப்பிட்டிருப்பீங்க... எப்போவாது தயிர் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!

Image Source: Freepik

Read Next

தர்பூசணி Vs முலாம்பழம்: கோடை காலத்தில் உங்களுக்கு எது சிறந்தது?

Disclaimer