தலைமுடி அடர்த்தியாக வளர தயிருடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
தலைமுடி அடர்த்தியாக வளர தயிருடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பயன்படுத்துங்க

இந்த நிலையைத் தவிர்க்க வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டு முடி பராமரிப்பில் செயல்படுத்துவது மிக நன்று. ஏனெனில், இவை பெரும்பாலும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. அந்த வகையில் தயிர் மற்றும் எலுமிச்சை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை ஷாம்புவுடன் பயன்படுத்துவது முடியின் தரத்தை மேம்படுத்துவதுடன், முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் தலைமுடிக்கு ஷாம்பூவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை கலந்து தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Hair Oil: இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க! கொத்து கொத்தா கொட்டுற முடி வளர ஆரம்பிச்சிடும்

ஷாம்பூவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை முடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

முடி பராமரிப்பில் தயிர் மற்றும் எலுமிச்சை பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இதில் உள்ள இயற்கையான கூறுகளே ஆகும். இந்த கூறுகள் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. இது தவிர, ஷாம்பூவுடன் தயிர், எலுமிச்சை சேர்த்து பயன்படுத்துவதால் கிடைக்கும் மற்ற நன்மைகளைக் காணலாம்.

  • பெரும்பாலானோர் சந்தையில் கிடைக்கும் ஷாம்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த ஷாம்புகள் பெரும்பாலும் ரசாயனங்கள் நிறைந்துள்ளவையாகக் காணப்படுகிறது. இந்த ஷாம்பு பயன்பாடு முடியை உலர வைக்கிறது. இந்த சூழ்நிலையில் ஷாம்புவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தடவுவது வெற்று ஷாம்புவின் தலைமுடியில் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கலாம். மேலும் இது முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • தயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த கலவையைப் பயன்படுத்துவது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை முழுமையாக வழங்குகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது, இது கோடைக்காலத்தில் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் முடியை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.
  • தயிரில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உலர்ந்த முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. ஏனெனில், இது இயற்கை மாய்ஸ்சரைசராகப் பயன்படுகிறது. அதே சமயம், எலுமிச்சைச் சாற்றில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • முடி உதிர்வு, உலர்ந்து போகுதல், உயிரற்ற நிலைமையில் இருப்பது போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது உச்சந்தலை வறட்சியே ஆகும். ஷாம்பூவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை கூந்தலை மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது.
  • இன்று பலரும் பொடுகு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதற்கு ஷாம்பூவுடன் தயிர் மற்றும் எலுமிச்சையை தடவுவது மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில், இந்த கலவையில் பொடுகைக் குறைக்க உதவும் கூறுகள் நிறைந்துள்ளது.
  • தலைமுடிக்கு தயிர் பயன்படுத்துவது உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. அதே சமயம், எலுமிச்சையில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது. சில நேரங்களில் அதிகப்படியான அரிப்பு காரணமாக, உச்சந்தலையில் தடிப்புகள் தோன்றலாம். இதனைத் தவிர்க்க ஷாம்பூவுடன் தயிர், எலுமிச்சை கலவையைச் சேர்த்து பயன்படுத்தலாம்.

இவ்வாறு தலைமுடிக்கு ஷாம்பூவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும். எனினும், ஆரோக்கியமான தலைமுடிக்கு ஷாம்பூவை நேரடியாக தலைமுடியில் தடவுவதைத் தவிர்த்து, தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். மேலும், இந்தக் கலவையில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பயன்படுத்துவது முடியின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hibiscus Oil For Hair: முடி ரொம்ப வேகமா வளர வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெயை தயார் செய்வது எப்படி?

Image Source: Freepik

Read Next

Amla Hair Oil: இந்த ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க! கொத்து கொத்தா கொட்டுற முடி வளர ஆரம்பிச்சிடும்

Disclaimer