Matcha tea benefits: தினமும் மட்சா டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Matcha tea benefits: தினமும் மட்சா டீ குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?


What Happens To Your Body When You Drink Matcha Tea Regularly: நாம் பல்வேறு வகையான டீ ரெசிபிகளை சுவைத்திருப்போம். இதில் மட்சா டீ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மட்சா கிரீன் டீ என்பது மிகவும் புகழ் பெற்ற டீ ரெசிபி ஆகும். இதை மக்கள் நிறைய பேர் விரும்பி அருந்துகின்றனர். இந்த பவுடரானது சுவையில் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியதாகும். இந்த கிரீன் டீ ஆனது ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பி வழிகிறது.

சிறப்பாக வளர்க்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பச்சை தேயிலை இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் மட்சா டீ, அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் பெரும் புகழ் பெற்றுள்ளது. முதலில் ஜப்பானில் பிரபலமான மட்சா டீ ஆனது, அதன் வளமான ஊட்டச்சத்துக்கள், துடிப்பான நிறம் மற்றும் சுவை போன்றவற்றிற்காக பல்வேறு இடங்களில் இது பிரபலமாகி வருகிறது. தினமும் மட்சா டீ குடிக்கும் போது உடலில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea Myths: க்ரீன் டீ உண்மையில் உடல் எடையை குறைக்குமா? இதில் காஃபின் இல்லையா?

தினமும் மட்சா டீ அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடையிழப்பு

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு கிரீன் டீ மட்டுமல்லாமல், மட்சா டீயும் உதவுகிறது. எனவே ஒவ்வொருவரும் மட்சா டீயை அவர்களது உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. ஆராய்ச்சி ஒன்றில், மட்சா டீ போன்ற கிரீன் டீ சாறு உட்கொள்வது தெர்மோஜெனீசிஸ் அதாவது உடலின் கலோரிகளை எரிக்கும் விதத்தை அதிகரிக்கிறது. இந்த விளைவு உடல் அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற மேம்பாட்டிற்கு

மட்சாவின் மிகவும் நன்கு அறியப்பட்ட நன்மைகளில் ஒன்றாக அமைவது மட்சா டீ ஆகும். இதற்கு இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக செறிவு ஆகும். மேலும், மட்சாவில் ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியான கேடசின்கள் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, மட்சாவில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த கேடசின் ஆன, எபிகல்லோகேடசின் கேலேட் ஆனது, அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். ஆய்வு ஒன்றில் வழக்கமான கிரீன் டீயை விட, மட்சாவில் அதிகளவு எபிகல்லோகேடசின் கேலேட் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றிகள், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுவதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

நோயெதிர்ப்பு அமைப்பை ஆதரிக்க

மட்சா டீ ஆனது வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வளமான மூலமாகும். இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆய்வு ஒன்றில் இவை நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மட்சா டீ அருந்துவது உடலின் இயற்கையான பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, காய்ச்சல் போன்ற தொற்றுக்களைத் தவிர்க்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

இதய ஆரோக்கியம்

தினசரி மட்சா டீ அருந்துவது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. கேடசின்கள் அதிலும் குறிப்பாக, எபிகல்லோகேடசின் கேலேட் (EGCG) எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், எல்டிஎல்-ன் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இது இதய நோய் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க காரணியாக செயல்படுகிறது. மட்சா டீ அருந்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கிரீன் டீயைத் தொடர்ந்து உட்கொள்வது வீக்கத்தைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. நாள்தோறும் மட்சா டீ அருந்துவதால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பிற இதய பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

மன அமைதி மேம்பாட்டிற்கு

மட்சாவில் எல்-தியானைன் என்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இது தளர்வை ஊக்குவித்து, தூக்கத்தைப் பாதிக்கும் மன அழுத்தத்தை குறைக்கிறது. எல்-தியானைன் நிறைந்திருப்பது, காபி அல்லது மற்ற காஃபினேட்டட் பானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது. இது திடீரென ஆற்றலைத் தூண்டுவதற்குப் பதிலாக, மட்சா அமைதியை ஊக்குவிக்கிறது. மேலும் இது மென்மையான, நீடித்த விழிப்புணர்வைத் தருகிறது. ஆய்வு ஒன்றில் எல்-தியானைன் அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது, மன சோர்வைக் குறைக்கிறது. தினமும் மட்சா டீ குடிப்பது, நாள் முழுவதும் கவனம் செலுத்தவும், விழிப்புடன் இருக்கவும், அமைதியாகவும் இருக்க உதவுகிறது. எனவே இது மன அழுத்தம் நிறைந்த சூழல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இவ்வாறு மட்சா டீ அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Green Tea: நலன் தரும் கிரீன் டீயின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

தினமும் பேரிக்காய் சாப்பிடுவது நல்லதா.?

Disclaimer