Benefits Of Green Tea: நலன் தரும் கிரீன் டீயின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Benefits Of Green Tea: நலன் தரும் கிரீன் டீயின் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

கிரீன் டீ நன்மைகள்

தினந்தோறும் கிரீன் டீ அருந்துவதால், பல்வேறு வகையான உடல் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அதில் குறிப்பாக அமைவது உடல் எடையைக் குறைப்பது. மேலும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருபவையாக அமைகின்றன. கிரீன் டி அருந்துவதால் நாம் பெறக்கூடிய சில நன்மைகளைக் காணலாம்.

இந்தப் பதிவு உதவலாம்: முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்

எடை குறைப்பு

உடல் எடையைக் குறைப்பதில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று கிரீன் டீ ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கு உதவுகிறது. தினந்தோறும் இரண்டு கப் கிரீன் டீ அருந்துபவர்கள், 6 மாதங்களில் குறிப்பிட்ட அளவு உடல் எடையைக் குறைக்கலாம்.

தலைவலியைக் குணமாக்க

தலைவலி வந்து விட்டால், முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது டீ தான். இந்த கிரீன் டீயும் அந்த வகையையே சார்ந்தது. தலைவலி வரும் சமயத்தில் கிரீன் டீ அருந்தும் போது, குறைவான வலியை அனுபவிப்பர் என கூறப்படுகிறது.

இந்தப் பதிவு உதவலாம்: இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே

புற்றுநோய் தடுப்பு

பெருங்குடல் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க கிரீன் டீ உதவுகிறது. மேலும், இது மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவுகிறது.

மனச்சோர்விலிருந்து விடுபடுதல்

மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிப்பதில் கிரீன் டீ உதவுகிறது. கிரீன் டீ மனநிலையை மாற்றுவதாக அமைகிறது.

இந்தப் பதிவு உதவலாம்: வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்

பற்கள் வெண்மையாகுதல்

பச்சை தேயிலையானது பற்களை வெண்மையாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பற்களில் இருக்கக் கூடிய பிளேக் கட்டிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த கிரீன் டீ உதவுகிறது.

கண் பாதுகாப்பு

கிரீன் டீ உட்கொள்பவர்கள், அதனை குடிக்காதவர்களை விட சிறந்த கண்பார்வையைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Image Source: Freepik

Read Next

Benefits of Coffee: காபியிலும், காபித் தூளிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Disclaimer