சமீப காலமாக கிரீன் டீ அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எடை குறைக்க விரும்புபவர்கள் எடுக்கும் முதல் முடிவு கிரீன் டீ குடிப்பதுதான். அனைவரும் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களாகி வருகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் பால் டீக்கு பதிலாக கிரீன் டீ குடிக்கத் தொடங்கியுள்ளனர். கிரீன் டீயை எப்போது குடிக்க வேண்டும் என்று பலர் குழப்பத்தில் உள்ளனர்? ஒரு நாளைக்கு எத்தனை முறை மற்றும் எத்தனை நாட்களுக்கு கிரீன் டீ, குடிக்க வேண்டும்? என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு வாரங்களுக்கு கிரீன் டீ குடிப்பதால் கல்லீரல் செயல்பாடு மேம்படும். கொழுப்பு கல்லீரல் நோயின் வளர்ச்சி குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது:
நான்கு வாரங்களுக்கு கிரீன் டீ குடிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிரீன் டீ குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து வீக்கத்தைக் குறைக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெளிவாக அறியப்படுகிறது. கிரீன் டீயில் உள்ள எல். தியாமின் மூளைக்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது:
கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் கல்லீரலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும், கொழுப்பு கல்லீரல் அபாயத்தைக் குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்வதேச மூலக்கூறு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டு ஆய்வில், 'கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொழுப்பு அதிகரிப்பதை குறைக்கின்றன' என்று கூறுகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது:
பல ஆய்வுகள் கிரீன் டீ குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறுகின்றன. மைக்ரோபயாலஜி அண்ட் இம்யூனாலஜி இதழில் 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கிரீன் டீ குடிப்பது குடலில் உள்ள பைஃபிடோபாக்டீரியா மற்றும் பிற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அதரிக்கிறது என்று கூறுகிறது. "கிரீன் டீ குடிக்கத் தொடங்கிய 10 நாட்களுக்குள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது" என்று மருத்துவ நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
எடை இழப்புக்கு உதவுகிறது:
கிரீன் டீ குடிப்பது எடை ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு உதவும். கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் இதய ஆரோக்கியம், எடை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் மதிப்பாய்வில், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் எடை, உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க கிரீன் டீ உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Image Source: Freepik