What happens if I eat chia seeds for 2 weeks: சியா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய சிறிய விதைகளாகும். மிக முக்கிய ஊட்டச்சத்துக்களாக, நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுக்களையும் கொண்டுள்ளன. இது தவிர, சியா விதைகளில் தாவர அடிப்படையிலான புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த சிறிய அளவு விதைகளில் கிடைக்கப்பெறும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு எளிமையாக கிடைத்து விடுகிறது. உணவு ஆரோக்கியமானதாக இருக்க விரும்புபவர்களும், செரிமானம், உடல் எடையிழப்பு, இதய ஆரோக்கியம் போன்றவற்றை பராமரிக்க விரும்புபவர்களும் தங்களது அன்றாட உணவுமுறையில் சியா விதைகளைச் சேர்ப்பது அவசியமாகும். இந்த சியா விதைகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.
அவ்வாறு சமீபத்தில் டாக்டர் சேதி அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சியா விதைகளை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா? மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ
சியா விதைகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடையை நிர்வகிப்பதற்கு
டை இழப்புக்கு முயற்சிக்கும் போது அடிக்கடி பசி உணர்வு இருப்பின், சியா விதைகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதன் மூலம் பசி உணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது குறித்து மருத்துவர் சேதி அவர்கள் குறிப்பிடுவதாவது,”நார்ச்சத்துக்கள் நிறைந்த சியா விதைகளைச் சாப்பிடும் போது வயிறு நிறைந்த திருப்திகரமான உணர்வை தருகிறது. இந்த பசி உணர்வு உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செரிமான ஆரோக்கியத்திற்கு சியா விதைகள்
சியா விதைகளை சாப்பிடும் போது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க முடியும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். செரிமானத் தொல்லை அவ்வப்போது இருப்பின், தொடர்ந்து சியா விதைகளை 2 வாரங்கள் சாப்பிடும் போது அஜீரணக் கோளாறு மாற்றங்கள் குறைவதைக் காணலாம். மேலும் செரிமான இயக்கம் சீராக இருப்பின், குடல் இயக்கங்களும் சீராக இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க
நீரிழப்பு காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேற்ற முடியாமல் போகலாம். இதனால் உடல் ஆற்றல் இல்லாமல் சோர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நீரிழப்பு சிறுநீரக கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், சியா விதைகளை உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது குறித்து டாக்டர் சேதி குறிப்பிட்டதாவது, “சியா விதைகள் அதன் எடையை விட 12 மடங்கு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை ஆகும். இதை உட்கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து சியா விதை சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா.?
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க
சியா விதைகள் உடலுக்கு நீரேற்றத்தைத் தருவதாகும். அதே சமயம், இந்த விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இரண்டும் இணைந்து சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது சருமத்திற்கு நுணுக்கமான பராமரிப்பை அளிக்கிறது. தொடர்ந்து இரண்டு வாரங்கள் சியா விதைகளை உட்கொள்வது சருமம் எத்தகைய பிரச்சனையும் இல்லாமல் பளபளப்பான சருமத்தின் தோற்றத்தைப் பெற வழிவகுக்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
- சியா விதைகளை சாப்பிடுவதற்கு முன்பாக அதை சரியான முறையில் சாப்பிடுவது அவசியமாகும்.
- சியா விதைகள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- உலர்ந்த சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி தொண்டையில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.
- இது உடலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதன் காரணமாக, செரிமான அசெளகரியத்தை தடுக்க சிறிது சிறிதாக சாப்பிட தொடங்க வேண்டும்.
- அரிதாக இவை ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இதை சிறிது சாப்பிட்ட பின், உடல் ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு இதை சாப்பிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் மட்டுமே சாப்பிட வேண்டும். அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சியா விதையின் முழு பலனையும் பெற.. இந்த தவறுகளை செய்யாதீர்கள்..
Image Source: Freepik