Benefits of eating pomegranate seeds: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகும். இதில் உடலுக்கு நன்மை பயக்கும் பழங்களில் மாதுளை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மாதுளையில் குறைந்தளவிலான கலோரிகள் மற்றும் அதிகளவிலான நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். எனவே இதை எடை மேலாண்மை உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
அன்றாட வாழ்வில் மாதுளையைப் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். இது சிவப்பு, ஜூசி மற்றும் பிரகாசமான பழங்களில் மட்டும் ஊட்டச்சத்துக்கள் இல்லை. அதன் விதைகளிலும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இதில் மாதுளம்பழத்தின் விதைகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pomegranate Peel: மாதுளை தோலை வேக வைத்து தண்ணீர் குடிச்சிருக்கீங்களா? இனி கட்டாயம் குடிப்பீங்க!
மாதுளை விதைகளின் ஊட்டச்சத்துக்கள்
ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்டபடி, மாதுளை விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், குறிப்பாக அந்தோசயனின்கள் மற்றும் புனிகலஜின் நிறைந்துள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாதுளை விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்த
மாதுளை பழத்தின் விதைகள் அதன் நார்ச்சத்து மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் நன்கு அறியப்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியைப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுகிறது. கூடுதலாக, இந்த விதைகள் லேசான மலமிளக்கிய விளைவைக் கொண்டிருப்பதால், செரிமான அசௌகரியத்தை அனுபவிப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
மாதுளை விதைகளில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளது. வைட்டமின் சி வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கும் இரத்த உறைதலுக்கும் அவசியமாகும். அதே சமயம், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கவும், ஃபோலேட் டிஎன்ஏ தொகுப்பு மற்றும் செல் பழுதுபார்ப்புக்கும் மிக முக்கியமாகும்.
ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த
மாதுளை விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. குறிப்பாக, இதன் பாலிபினால்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இது நீரிழிவு, இதய சுகாதார பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகின்றன. எனவே இந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்க மாதுளை விதைகளை சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pomegranate benefits: தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இதய ஆரோக்கியத்திற்கு
மாதுளை விதைகளை உட்கொள்வது கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால், இவை இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. மேலும் இவை வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க
மாதுளை விதைகளில் அந்தோசயினின்கள் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சேர்மங்கள் உள்ளது. இவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இந்த சேர்மங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், அப்போப்டொசிஸை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் உடல் இயற்கையாகவே சேதமடைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் செல்களை நீக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் இது புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதால், இதை உணவில் சேர்ப்பது புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு பங்களிக்கும் எனக் கூறப்படுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
மாதுளை விதைகள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கவும், முகப்பருவைக் குறைக்க, வெயிலால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும் இதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் முன்கூட்டிய வயதான அபாயத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம், பளபளப்பான, இளமையான சருமத்தைப் பெறலாம்.
மாதுளை விதைகளை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே இதை ஜூசியாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் விதைகளையும் உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 4 நன்மைகள் உங்களுக்கு வேணுன்னா?... தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுங்க...!
Image Source: Freepik