
Is pineapple tea good for you: கோடைக்காலம் என்றாலே பலரும் குளிர்ச்சியான பானங்களையே விரும்புவார்கள். எனினும், தேநீரை அதிகம் விரும்புபவர்கள் அதை எந்த காலத்திலும் கைவிட மாட்டார்கள். தேநீரைப் பொறுத்தவரை ஏராளமான வகைகள் உள்ளன. மசாலா தேநீர் முதல் இஞ்சி தேநீர் வரை, கிரீன் டீ முதல் செம்பருத்தி டீ வரை பல்வேறு விருப்பங்கள் உள்ளது. இந்த வரிசையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான அன்னாசி தேநீரையும் பட்டியலில் சேர்க்கலாம். இந்த பானத்தின் சுவாரஸ்யமான விஷயமாக, பழத்தின் தோலை தூக்கி எறிய வேண்டியதில்லை.
தேநீரைச் சதைப் பகுதியைப் பயன்படுத்தி தயாரிக்க முடியும் என்றாலும், இந்த பானத்தில் தோல் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த தேநீரில் உள்ள வைட்டமின் சி போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இதன் தோலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் அன்னாச்சி தேநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதையும், இந்த கோடைகால பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pineapple Juice Benefits: அன்னாசிப்பழச் சாறு குடிச்சா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்
அன்னாசி தேநீர் பற்றி தெரியுமா?
அன்னாசிப்பழத்தை ஊறவைத்து தயாரிக்கப்படக்கூடிய ஒரு பானமே அன்னாச்சி தேநீர் ஆகும். தோல் மற்றும் சதை உட்பட பழத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி, இந்த கோடைக்கால பானத்தைத் தயார் செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், இது பொதுவாக தோலைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடியதாகும். இதில் ப்ரோமைலின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. எனவே, இந்த பானம் அன்னாசி தோல் தேநீர் என்று அழைக்கப்படுகிறது. இதன் சுவையை அதிகரிக்க பெரும்பாலும் இஞ்சி அல்லது இலவங்கப்பட்டை போன்ற பிற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.
கோடையில் அன்னாச்சி தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
அன்னாச்சி பழத்தின் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் நீர் போன்றவை உள்ளதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கவும் உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
அன்னாச்சி பழத்தின் தோலில் புரோமெலைன் என்ற ஒரு புரோட்டியோலிடிக் நொதி இருப்பதால் இவை புரதங்களை உடைக்க உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கம் மற்றும் வாயு போன்ற அசௌகரியங்களைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது குடலைப் பாதுகாக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த தோலில் உள்ள புரோமெலைன், செரிமான நிவாரணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க
அன்னாசிப்பழ தேநீரில் உள்ள நன்மைகளில் ஒன்றாக அதன் ஆக்ஸிஜனேற்ற சக்தி நிலையம் அமைகிறது. இந்த பழமானது ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றின் சிறந்த வளமான மூலமாகும். இவை அனைத்துமே ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். அன்னாச்சி தோலில் இந்த ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளது. எனவே இது ஒரு மதிப்புமிக்க அங்கமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pineapple Biryani: சுவையான பைனாப்பிள் தம் பிரியாணி செய்வது எப்படி? இதோ ரெசிபி!
வீக்கத்தைக் குறைக்க
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமைலின் என்ற நொதியானது வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே இது கீல்வாதம் உள்ளவர்களுக்கு நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஒன்றில், தோலில் சுமார் 0.23 சதவீதம் புரோமைலின் செயல்பாடு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சரும ஆரோக்கியத்திற்கு
அன்னாசி தேநீர் அருந்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இவை கொலாஜன் தொகுப்புக்கு முக்கியமானதாகும். இந்த அமிலமானது முகம் மற்றும் பிற பகுதிகளில் தோன்றும் வயதான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சரும அமைப்பை மேம்படுத்தலாம்.
அன்னாசி தேநீரைத் தயார் செய்வது எப்படி?
தேவையானவை
- 1 பழத்தின் அன்னாசி தோல்
- இஞ்சி - 1 அங்குலம் (துருவியது)
- தண்ணீர் - 4 கப்
- எலுமிச்சை சாறு
தயாரிக்கும் முறை
- முதலில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
- அதில் நன்கு கழுவிய தோல்களை சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால், சில அன்னாச்சிப்பழ சதை துண்டுகளையும் சேர்க்கலாம்.
- அதன் பிறகு, இஞ்சி மற்றும் ஒரு எலுமிச்சைப்பழச் சாற்றை சேர்க்க வேண்டும்.
- இதன் சுவையை அதிகரிக்க விரும்பினால், 10 முதல் 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் வேக வைக்கலாம்.
- பின்னர், இதை வடிகட்டி சூடாக உட்கொள்ளலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆரோக்கியமான ஐஸ்கட் டீ போல குடிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Super Food: அன்னாச்சி பழத்துடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version