சுட்டெரிக்கும் வெயிலில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Benefits of drinking 1 glass buttermilk daily in summer: கோடைக்காலத்தில் கொளுத்தும் வெப்பத்தால் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக நீரிழப்பு அமைகிறது. இது புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது. இதில் கோடைக்காலத்தில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சுட்டெரிக்கும் வெயிலில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Is it good to Drink Buttermilk every day in summer: கோடைக்கால வெப்பத்தால் மக்கள் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த கொளுத்தும் வெப்பத்தின் முக்கிய தாக்கமாக உடலில் நீரிழப்பு ஏற்படுவது அடங்கும். நீரிழப்பு ஏற்படுவது பொதுவானதாக இருந்தாலும் உடல் சோர்வு, பலவீனம் மற்றும் இன்னும் பிற நீரிழப்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உடலை நீரேற்றமாக மற்றும் குளிர்ச்சியாக வைப்பது அவசியமாகிறது. மேலும், இந்த பருவத்தில் உடலைப் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், வழக்கமான பணிகளைத் தொடரவும், இந்த பருவம் முழுவதும் நம் உடல் நன்கு நீரேற்றமாக இருக்க வேண்டும்.

எனவே தான் பலரும் கோடை வெப்பத்தில் குளிர்ச்சியான, சுவையான பானத்தை விரும்புகின்றனர். எனினும், கோடைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மோர் குடிப்பது சரியானதாக இருக்குமா என்று நினைத்திருக்கிறீர்களா? ஆம். உண்மையில் உடலுக்கு உடனடி குளிர்ச்சி விளைவுகளுடன், பிற ஆரோக்கிய நன்மைகளையும் தரும் விதமாக மோர் அமைகிறது. இது அதன் சுவையை மட்டும் குறிப்பிடுவதல்ல. இதில் கோடைக்காலத்தில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் 1 டம்ளர் மோர் குடிச்சா இந்த பிரச்சனை உங்களுக்கு வரவே வராது

கோடைக்காலத்தில் மோர் சாப்பிடுவது நல்லதா?

மோரின் அசாதாரண சுகாதார நன்மைகளுக்காக, இந்தியர்கள் பல ஆண்டுகளாகவே மோரை பயன்படுத்தி வருகிரது. கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தினால் உடலிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு, நீரிழப்பை எதிர்த்துப் போராடும் நிலை ஏற்படும். இதற்கு மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக மோர் குடிப்பது அடங்கும்.

எனினும், கோடைக்காலத்தில் பலரும் காஃபின், சர்க்கரை நிறைந்த குளிர்ச்சி பானங்களையே அதிகம் விரும்புவர். ஆனால், இதற்கு ஆரோக்கியமான மாற்றாக புறக்கணிக்க முடியாத அளவுக்கு அற்புத நன்மைகளை வழங்கும் வகையில் மோர் அமைகிறது. இது எளிதாக சில பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

தயிர் மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இந்திய புத்துணர்ச்சியூட்டும் பானமான மோர் அருந்துவது கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாகும். இது லேசான, ஓரளவு புளிப்பு சுவை கொண்ட உடலுக்குக் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைத் தரும் பானமாகும். இதன் மிகச்சிறந்த நன்மைகளில் ஒன்று, இது குறைந்த கொழுப்பு நிறைந்த பானமாகும்.

எடை இழப்பை ஆதரிக்க

மோரில் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால், இது எடையிழப்புக்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது. இது எடை இழப்புக்கு ஒரு அருமையான பானமாக அமைகிறது. உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த பானம் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள், மக்னீசியம் மற்றும் இன்னும் பிற நொதிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை கொழுப்பைச் சேர்க்காமல் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர்வதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

செரிமானத்தை மேம்படுத்த

இஞ்சி, மிளகு, சீரகம் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்கள் மோர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப் பொருள்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கழுவவும், குடல் சுவரை விடுவிக்கவும் கணிசமான உணவுக்குப் பிறகு இதை அருந்தலாம். இந்த பானம் அருந்துவது டிஸ்பெப்சியா மற்றும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் சிறந்த இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாக அமைகிறது. இது செரிமானத்திற்கு உதவுவதுடன், அதில் உள்ள புரோபயாடிக் நுண்ணுயிரிகள் வயிற்று நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Buttermilk Side Effects: உப்பு சேர்த்து மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

உடலைக் குளிர்ச்சியாக வைக்க

இது வியர்வை உற்பத்தியைக் குறைத்து முழு உடலையும் அமைதிப்படுத்த உதவுகிறது. கோடை வெப்பத்தில் இந்த அற்புதமான பானத்தை ஒரு கிளாஸ் அருந்துவதன் மூலம் உடலைக் குளிர்ச்சியாக வைக்கலாம். இதில், சேர்க்கப்படும் உப்பு, சீரகம் மற்றும் புதினா போன்றவை உடலை விரைவாக குளிர்விக்கும் ஒரு குணப்படுத்தும் பானமாகும். மாதவிடாய் நின்ற பிறகும், உடல் வெப்பத்தினால் அவதியுறும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்க

மோரில் 90% க்கும் அதிகமான நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, இதில் உள்ள பொட்டாசியம் நீரேற்றத்தை பராமரிக்க ஒரு சிறந்த பானமாக அமைகிரது. இந்த இனிமையான பானம், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், உடலின் நீர் சமநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

அமிலத்தன்மையைத் தடுக்க

கொழுப்பு மற்றும் காரமான உணவுகள் காரணமாக அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படலாம். இதற்கு சிறந்த தீர்வாக மோர் அமைகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது. எனவே அமிலத்தன்மை பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், மோர் உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். இது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கம் மற்றும் மலச்சிக்கலின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: சுட்டெரிக்கும் வெயிலில் குளுகுளுனு இருக்க நிபுணர் சொன்ன இந்த மூன்றை மட்டும் எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Summer Fruits: கொளுத்தும் வெயிலில் கண்டிப்பாக தவறாமல் சாப்பிட வேண்டிய 6 பழங்கள்!

Disclaimer