Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Pomegranate Juice Benefits: தினமும் ஒரு டம்ளர் மாதுளைச் சாறு அருந்துங்க! இந்த பிரச்சனை எல்லாம் பறந்தோடிடும்

Health Benefits Of Pomegranate Juice Daily: நாம் உண்ணும் பழ வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் மாதுளையும் அடங்கும். இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மாதுளம் பழத்தில் வைட்டமின் கே, சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து கணப்படுகிறது.

மேலும் மாதுளையிலிருந்து தயாரிக்கப்படும் மாதுளை சாற்றை தினமும் அருந்துவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இது ஒரு பல்துறை பானமாகும். உணவுகளுடன் சரியாக இணைக்கப்படும் போது ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. எனினும் தினந்தோறும் மாதுளை சாறு அருந்துபவர்கள், அதிலுள்ள டானின்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் டானின்கள் காலப்போக்கில் பற்களை கறைபடுத்தலாம். இதில், தினமும் மாதுளைச் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cucumber Water Benefits: வெள்ளரி தண்ணீர் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

தினமும் மாதுளை சாறு குடிப்பதன் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

மாதுளை சாறு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களைத் தவிர்க்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

இதில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு, மூட்டுவலி, புற்றுநோய் போன்ற பல்வேறு நாள்பட்ட நிலைகளைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த

மாதுளைச் சாற்றில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்கள், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை உடலுக்கு வழங்குகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

மாதுளை சாறு அருந்துவது வயிற்றுப்போக்கு மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு இயற்கை தீர்வாகக் கருதப்படுகிறது. இவை ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது. இதற்கு மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Falsa Fruit Benefits: இந்திய செர்பெட் பெர்ரி பழமா? இதோட நன்மைகளைக் கேட்டா சுவைக்காம விட மாட்டீங்க

உடல் எடை மேலாண்மைக்கு

மாதுளை சாறு குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கிறது.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த

மாதுளை சாறு அருந்துவது மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது அல்சைமர் போன்ற நியூரோடிஜெனரேட்டிவ் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை சீராக்க

இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனினும், மாதுளை சாறு இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டுள்ளது. எனவே இதை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

மாதுளை சாறு அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும் சில உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாற்றை தினமும் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Red Banana Benefits: இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை பல நன்மைகளை தரும் செவ்வாழை!

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content