$
Is red banana better than yellow banana: வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்க கூடிய ஒரு ஆரோக்கியம் நிறைந்த பழம். குறிப்பாக ஜிம்மிற்கு செல்லும் பெரும்பாலான மக்கள் வாழைப்பழம் சாப்பிடுவது இயல்பு. நாம் அனைவருக்கும் மஞ்சள் அல்லது பச்சை வாழைப்பழ ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியும். ஆனால், உங்களுக்கு சிவப்பு வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டதுன்டா?
மஞ்சள் வாழைப்பழத்தை விட ஆரோக்கியம் நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? செவ்வாழையில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அந்தவகையில், சிவப்பு வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இதன் பயன்கள் பற்றி தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆச்சர்யப்படுவீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Red Banana Eating Time: செவ்வாழைப் பழம் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா?
கண்களுக்கு சிறந்தது

தற்போதைய காலத்தில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் முழுமையாக மாறிவிட்டது. உணவு பழக்கம் முதல் வேலை பளு வரை அனைத்து விஷயங்களும் மாற்றிவிட்டது. நம்மில் பலர் அதிக நேரம் கணினியில் உட்காந்து வேலை செய்கிறோம். அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை செய்வது, உங்கள் கண்களை வேகமாக பாதிக்கும்.
கண்களை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு கண்களுக்குப் பலன் தரக்கூடிய சில காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். செவ்வாழைப்பழத்தில் இரண்டு வகையான கரோட்டினாய்டுகள் உள்ளதால் கண் பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்கும் என்று கூறப்படுகிறது.
செரிமான அமைப்பை சரியாக வைக்கும்

ஹோட்டல் உணவுகள், பொரித்த உணவுகள் போன்ற பல உணவுகள் இன்றைய காலகட்டத்தில் செரிமான செயல்பாட்டில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், சில பழங்களை நமது உணவில் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியம் மற்றும் செரிமான செயல்முறை நன்றாக இருக்கும். உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது பல நன்மைகளை வழங்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Red Banana: தினமும் ஒரு செவ்வாழை போதும்! பல ஆரோக்கியம் கிட்டும்..
இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்

செவ்வாழையில் அதிக அளவு இரும்பு சத்து இல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். சாதாரண வாழைப்பத்தை விட செவ்வாழைப்பழத்தில் அதிக அளவு இருப்பு சத்து உள்ளது.
உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். இது இரும்புச்சத்து குறைபாட்டை மட்டும் அல்ல, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும். மேலும், இது பசியை முழுமையாக கட்டுப்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : Red Banana Benefits: விந்தணு அதிகரிப்பு முதல் பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழத்தின் நன்மைகள் இங்கே..
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

சிவப்பு வாழைப்பழத்தை உட்கொள்வது மனதை அமைதியாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள டிரிப்டோபான் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் உங்கள் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. கோடை காலத்தில் வயிற்றில் ஏற்படும் எரியும் உணர்வையும் இதன் நுகர்வு குறைக்கிறது. மேலும், இதய நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.
Pic Courtesy: Freepik