Which Time Is Best To Eat Red Banana: நாம் அனைவரும் விரும்பி உண்ணும் வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் உள்ளன. இதில் செவ்வாழை பழத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இது சிறப்பு வாய்ந்த பழமாகும். இதில் அதிகளவிலான உயிர் சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன.
செவ்வாழைப் பழத்தில் கரோட்டினாய்டுகள், ஃபிளவனால்கள், அந்தோசயினின்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தருகிறது. மஞ்சள் நிற வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் செவ்வாழைப் பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Carrot Benefits: தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா?
செவ்வாழை பழத்தின் நன்மைகள்
செவ்வாழை பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
- மூளை செயல்பாடு, கல்லீரல், இதய செயல்பாடு, குடல் இயக்கம் மற்றும் எலும்புகள் வலுவடைய போன்ற அனைத்து உடல் செயல்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் செவ்வாழைப் பழத்தில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
- மாலைக்கண் நோய் பிரச்சனைக்கு செவ்வாழைப் பழம் சிறந்த தேர்வாகும். கண் பார்வை குறைய ஆரம்பிக்கும் நேரத்திலேயே இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இது விரைவில் பார்வையைத் தெளிவடையச் செய்யும்.
- செவ்வாழைப்பழத்தை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது ஆரம்ப கால கரு சிதைவு ஏற்படுதலையும் தடுக்கிறது.
- செவ்வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும் இது சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Dry Fruits: ஹெல்த்தியா இருக்க ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுங்க
செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவதற்கான சரியான நேரம்
செவ்வாழைப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும், செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவதற்கென சரியான நேரம் உள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகுந்த நன்மையைத் தரும்.
செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி ஆகும். இதைத் தவிர, பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு செவ்வாழைப் பழத்தை உட்கொள்ளலாம். குறிப்பாக, உணவு சாப்பிட்ட பிறகு செவ்வாழைப் பழத்தை உட்கொள்வது மந்தத்தன்மையைத் தருவதுடன், முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காது.
இந்த பதிவும் உதவலாம்: Red Banana Benefits: விந்தணு அதிகரிப்பு முதல் பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழத்தின் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik