What will happen if I eat red bananas every day: நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், விதைகள், பானங்கள், கீரை வகைகள் போன்றவை ஏராளம் உள்ளது. இதில் பழங்களைப் பொறுத்த வரை நமக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடுவதாகவும் உள்ள பழங்களில் வாழைப்பழம் அடங்கும். பொதுவாக வாழைப்பழங்களைப் பொறுத்த வரை ஏராளமான வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளைக் கொண்டதாகும். இந்த பல்வேறு வகையான பழங்களில் அதிக ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பழமாக செவ்வாழைப்பழம் அமைகிறது.
பல்வேறு வகையான வாழைப்பழங்களில், செவ்வாழைப்பழம் மிகவும் முக்கியமானது. வேறு வாழைப்பழங்களுடன் ஒப்பிடுகையில் செவ்வாழைப்பழம் சற்று அதிகளவிலான ஆரோக்கிய நன்மைகளையே வழங்குகிறது. மற்ற வாழைப்பழங்களைவிட இனிப்பு அதிகமாக இருக்கும். அதே போல, இதில் அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. செவ்வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Red Banana Benefits: இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு வரை பல நன்மைகளை தரும் செவ்வாழை!
தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடையிழப்புக்கு
செவ்வாழைப்பழம் உட்கொள்வது உடல் எடையிழப்புக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது பசியுணர்வைத் தடுத்து, அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடையிழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
நரம்புத்தளர்ச்சி நீங்க
செவ்வாழை பழத்தில் அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன. குறிப்பாக, நரம்புத் திசுக்களில் உண்டாகும் நச்சுக்களை வெளியேற்றி டீடாக்ஸ் செய்வதற்கு உதவுகிறது. எனவே வலிப்பு நோயால் அவதிப்படுகிறவர்கள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் செவ்வாழையை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கலாம் என்றும், அதன் அறிகுறிகளைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு
சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளுக்கு செவ்வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாகும். செவ்வாழையில் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனுடன், செவ்வாழைப்பழத்தில் அதிகளவிலான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியத்தின் உதவியுடன், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் பிரச்சினை உள்ளவர்களும் செவ்வாழை பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் அதனால் ஏற்படும் சிறுநீர்க் கடுப்புப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Red Banana Benefits: விந்தணு அதிகரிப்பு முதல் பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழத்தின் நன்மைகள் இங்கே..
கண் பார்வை மேம்பாட்டிற்கு
இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறு வயது முதலே கண் பார்வை குறைபாடு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தான் சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட செவ்வாழை மிகச்சிறந்த தேர்வாகும். குறிப்பாக, வயதானவர்களுக்கு கண் பார்வையல் ஏற்படும் மங்கள் மற்றும் மாலைக்கண் பிரச்சினை போன்ற பிரச்சனைகளை செவ்வாழை உட்கொள்வதன் மூலம் சரி செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த செவ்வாழையை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது.
பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பல் பலவீனமாக இருப்பது, பல் ஆடுவது, ஈறுகள் பலவீனமாக இருப்பது போன்ற பல்வேறு பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு செவ்வாழை உதவுகிறது. குறிப்பாக, இதைத் தொடர்ந்து 21 நாள்கள் உட்கொள்வது வாய் துர்நாற்றம் முதல் பல்வேறு பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் தீரும் என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.
சரும பிரச்சனையைத் தீர்ப்பதற்கு
சருமத்தில் வறட்சி, தோல் வெடிப்பு, சருமம் சிவந்து போதல், சொரியாசிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான சருமம் சார்ந்த பிரச்சனைகளைப் பலரும் சந்திக்கின்றனர். இந்தப் பிரச்சனைகளைச் செவ்வாழையைக் கொண்டு சரிசெய்ய முடியும். இதற்கு செவ்வாழையை உணவாக உட்கொள்வதன் மூலமும், பழத்தை உட்கொண்ட பிறகு, அதை சருமத்திற்கு மேற்பூச்சாகப் பயன்படுத்துவதன் மூலமும் சொரியாசிஸ் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Red Banana: தினமும் ஒரு செவ்வாழை போதும்! பல ஆரோக்கியம் கிட்டும்..
Image Source: Freepik