What happens to body after 30 days no sugar: அன்றாட உணவில் சர்க்கரையைச் சேர்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரையின் இனிப்பு சுவைக்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இதன் மீதான நாட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், சர்க்கரை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? என்பது குறித்து சிந்தித்ததுண்டா? உண்மையில், நம் ஆரோக்கியத்தின் எதிரியாகவே சர்க்கரை பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதிலும் அதிகப்படியான இனிப்பு உட்கொள்ளல் ஆனது பற்களை சேதப்படுத்துவதுடன், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ஆய்வு ஒன்றில், அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க கேக்குகள், குக்கீகள், ஐஸ்கிரீம், பேஸ்ட்ரிகள் போன்றவற்றை ஒதுக்கி வைப்பது மிகவும் நல்லது. இது தவிர, உடலில் சர்க்கரையைப் பெறுவதற்கு வேறு சில வழிகள் உள்ளது. அதாவது தேநீர் மற்றும் இன்னும் பிற பானங்களும் சர்க்கரை நிறைந்ததாக இருக்கலாம். இந்நிலையில் 30 நாள்களுக்குத் தொடர்ந்து சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது பல நன்மைகளைத் தருகிறது. இதில் தொடர்ந்து 30 நாள்களுக்கு சர்க்கரை உட்கொள்ளாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Blood Sugar Reducing Drinks: வேகமா ஏறும் சுகரை விவேகமா குறைக்கும் டாப் 7 ஆயுர்வேத பானங்கள்
30 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதன் நன்மைகள்
பொதுவாக அதிகப்படியான எதையும் தவிர்ப்பது மற்றும் பகுதிக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் மட்டுமே சமச்சீரான உணவை அடைவதற்கான எளிய வழியாகும். இதில் சர்க்கரையும் அடங்கும். சர்க்கரையானது அதிக கலோரிகளை உள்ளடக்கியதாகும். மேலும், சர்க்கரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது அதிகப்படியான உணவு உட்கொள்ளல் மற்றும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதில் ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
எடையிழப்பை ஆதரிக்க
பொதுவாக சர்க்கரைகள் சேர்க்கப்படாத உணவுகளை சாப்பிடுவது மொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இது எடையைக் குறைக்க வழிவகுக்கிறது. ஏனெனில் ஆய்வுகளில் சர்க்கரைகளின் அதிகப்படியான நுகர்வு அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பானங்கள், காலை உணவு தானியங்கள் மற்றும் தயிர் உட்பட, குறைந்த அல்லது சேர்க்கப்படாத சர்க்கரைகள் கொண்டதாக மாற்றினால், அது உண்ணும் உணவின் அளவை மாற்றாமல், கலோரிகளின் அளவை சேமிக்கவும் வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயைக் குறைக்க
அதிக சர்க்கரை நுகர்வு குறிப்பாக, இனிப்பு பானங்களை எடுத்துக் கொள்வது வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். சர்க்கரையின் வடிவில் நிறைய கலோரிகளை உட்கொள்வது எடை அதிகரிப்பைச் சந்திக்கலாம். அதிக எடை அல்லது பருமனானவர்களே பெரும்பாலும் இரத்தச் சர்க்கரை அளவால் பாதிப்படைகின்றனர். இன்சுலின் உணர்திறன் குறைவதால், வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். சர்க்கரை சேர்க்கப்படுவதைக் குறைப்பது எடையை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. இதன் மூலம் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sweets and Diabetes: இனிப்பு சாப்பிடாதவர்களுக்கும் சர்க்கரை நோய் வருமா? காரணம் என்ன?
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகளவு சர்க்கரை உள்ளிட்ட பழக்கங்கள் வீக்கத்துடன் இணைக்கப்பட்டதாகும். ஆய்வு ஒன்றில் ப்ரீடியாபயாட்டீஸ் உள்ள நபர்களில், சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொள்வது, சி-ரியாக்டிவ் புரதத்தின் உயர்ந்த அளவைக் கொண்டிருப்பதன் மாற்றத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இது வீக்கத்தின் முக்கிய காரணமாகும். நாள்பட்ட அழற்சி என்பது உடலில் ஒரு ஆரோக்கியமற்ற மற்றும் அசாதாரணமான நோயெதிர்ப்பு எதிர்வினையைக் குறிக்கிறது. சர்க்கரை உட்கொள்வது இந்த வீக்கத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரைகளைக் குறைப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், நோய்க்கிருமிகளை திறம்பட எதிர்த்துப் போராடலாம்.
இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு
சர்க்கரையை அதிகமாக உட்கொள்பவர்கள், எடை அதிகரிப்புடன் இதய நோய்களை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், ஆய்வு ஒன்றில் அதிகளவு சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய அமைப்பை பாதிக்கும் நிலைமைகளுக்கு அதிக ஆபத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இது வீக்கத்தை அதிகரிப்பதால், இதய நோய்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கலாம். அதன் படி, சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதயம் மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கலாம்.
சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம். இது நிலையான ஆற்றலை வழங்குவதுடன், குறைக்கப்பட்ட வீக்கம் மற்றும் நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. நீடித்த மேம்பாடுகளுக்கு படிப்படியாக மாற்றங்களை செய்வதன் மூலம், நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை அனுபவிக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: இனிப்பு சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்… இதை மட்டும் செய்யுங்க!
Image Source: Freepik