What vegetables do we eat in winter season: குளிர்காலம் பலரும் எதிர்பார்த்த காலமாக இருப்பினும், பல்வேறு நோய் அபாயங்களைச் சந்திக்கும் காலமாகவும் அமைகிறது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பாதிக்கப்படலாம். மேலும், குழந்தைகள் மற்றும் வயதானவர்களும் பல்வேறு நோய்த்தொற்றுக்களால் அவதியுறுகின்றனர். பொதுவாக குளிர்ந்த காலநிலையில், இரத்த நாளங்கள் சுருங்குகிறது. அதாவது, இரத்த ஓட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக உடலைச் சுற்றி இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டும்.
இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது. குளிர்ந்த காலநிலையில் உடல் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியை உண்டாக்குவதுடன், பருவகால விளைவுகளைச் சமாளிக்க உணவுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குளிர்காலத்தில் உடலை நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கவும் சில ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இது உடலை சூடேற்றவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
கீரை
குளிர்ந்த மற்றும் வறண்ட காலநிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கீரை அமைகிறது. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் நிறைந்துள்ளது.
நன்மைகள்
கீரை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இது தவிர, இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடவும், மலச்சிக்கல்லைப் போக்கவும் உதவுகிறது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
வெந்தய இலைகள்
குளிர்காலத்தில் வெந்தய இலைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, பி3, சி மற்றும் ஈ, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தய இலைகளை உட்கொள்வது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது.
நன்மைகள்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த வெந்தய இலையை எடுத்துக் கொள்வது, இந்த காலநிலையில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. மேலும், இது ஹார்மோன் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மூட்டுவலி, தோல் பிரச்சினைகள், இரைப்பை குடல் அழற்சி மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இது சர்க்கரை நோய் மற்றும் இதய நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Winter Foods: குளிர் காலத்தில் எடையை குறைக்க வேண்டுமா? உங்களுக்கான உணவுகள் இங்கே!
பீட்ரூட்
பீட்ரூட் ஆனது பல்வேறு தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட, சுவையான மற்றும் வண்ணமயமான பழமாகும். பீட்ரூட்டில் வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி, இரும்புச்சத்துக்கள் மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளது.
நன்மைகள்
இது கல்லீரல் நச்சு நீக்கும் செயல்முறைக்கு உதவுகிறது. மேலும் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
கடுகு இலைகள்
கடுகு கீரையில் குறைந்தளவிலான கலோரிகளே உள்ளது. மேலும், இதில் வைட்டமின்கள் B1, B2, B6, C, E, K, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம், தாமிரம், மெக்னீசியம், புரதம், கரோட்டின்கள், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுப்பொருள்களின் சிறந்த ஆதாரத்தை வழங்குகிறது.
நன்மைகள்
இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கடுகு கீரையில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது குடல் இயக்கத்தை ஆதரிக்கவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது இதய நோய் வராமல் தடுக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
கேரட்
கேரட் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த காய்கறியாகும். இதில் வைட்டமின்கள் ஏ, பி, பி2, பி3, சி, டி, ஈ, மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நன்மைகள்
கேரட்டில் உள்ள கரோட்டின், கண் பார்வையை மேம்படுத்தவும், இரவு குருட்டுத்தன்மையைத் தடுக்கவும் உதவுகிறது. இது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய் போன்றவை வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது சருமம், முடி மற்றும் நகங்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Winter Diet: குளிர் காலத்தில் தினமும் நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
Image Source: Freepik