பொதுவாக குளிர்காலத்தின் போது, நாம் சோம்பலாக உணர்கிறோம். இந்த நேரத்தில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இதனால் உடல் எடை அதிகரிக்க கூடும். இந்த சூழலில் ஜிம்முக்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க உணவு முறை உங்களுக்கு கை கொடுக்கும். குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை படித்து பயன் பெறவும்.
பச்சை இலை காய்கறிகள்

கீரைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதனால், குளிர் காலத்தில் கட்டாயம் கீரையை உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள்.
வெந்தயம்
பொதுவாக குளிர் காலங்களில், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, இரத்த உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை நிர்வகிக்க வெந்தயம் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் உள்ள கேலக்டோமனன் நொதிகள் உங்கள் பசியை கட்டுப்படுத்தும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கும். இதன் மூலம் உங்கள் எடையை நிர்வகிக்க முடியும்.
கேரட்
கேரட்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீற்கள். இதன் மூலம் உங்கள் எடையை நிர்வகிக்க முடியும்.
கொய்யாப்பழம்

குளிர் மற்றும் மழை காலங்களில் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. இது சளி தொல்லையில் இருந்து உங்களை காக்கும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனால் செரிமான பிரச்சனை நீங்கி, உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
எந்த உணவுகளாக இருந்தாலும் அளவு கட்டுப்பாடு முக்கியம். மேற்கூறிய அனைத்தும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், இதனை அதிகமாக உட்கொள்ளும் போது சில பக்க விளைவுகளும் ஏற்படும்.
Image Source: Freepik