Detox Diet: சிறந்த செரிமானத்திற்கு இரவு உணவிற்குப் பிறகு இந்த பானங்களை குடியுங்க!!

  • SHARE
  • FOLLOW
Detox Diet: சிறந்த செரிமானத்திற்கு இரவு உணவிற்குப் பிறகு இந்த பானங்களை குடியுங்க!!


How do you detox after eating heavy food: சில சமயங்களில் நாம் இரவு அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுமட்டும் அல்ல, வயிற்றில் கனமான உணர்வு ஏற்படுவதால் நம்மால் சரியாக தூங்க முடியாது. அதே போல, அதிக எண்ணெய் அல்லது காரமான உணவுகளை உண்பவர்களுக்கும் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும்.

இவற்றை தவிர்க்க டிடாக்ஸ் பானங்களை உட்கொள்ளலாம். டிடாக்ஸ் பானங்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இந்த டிடாக்ஸ் பானங்களை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Detox Liver: இதை குடித்தால் கல்லீரல் பாதுகாப்பாக இருக்கும்!

எண்ணெய் உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது டிடாக்ஸ் பானத்தை அருந்த வேண்டும். சுலபமாக தயார் செய்யக்கூடிய 3 டீடாக்ஸ் பானங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிளகுக்கீரை டிடாக்ஸ் டீ (Peppermint Detox Water Recipe)

நீங்கள் இரவு மிகவும் கனமான உணவை சாப்பிட்டிருந்தால், மிளகுக்கீரை தேநீர் குடிப்பது மிகவும் நல்லது. மிளகுக்கீரை வயிற்றை குளிர்விக்கிறது, மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுவலி பிரச்சனையும் குணமாகும். மிளகுக்கீரை டிடாக்ஸ் டீ தயாரிக்கும் முறை இங்கே_

முதலில், புதினா இலைகளை சுத்தம் செய்யவும்.
டிடாக்ஸ் வாட்டர் தயாரிக்க புதிய இலைகளை மட்டும் பயன்படுத்தவும்.
இந்த இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இலைகளின் சாறு தண்ணீருடன் கலந்ததும், ஒரு கோப்பையில் தண்ணீரை வடிகட்டவும்.
இந்த தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Soft Drinks Side Effects: குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நோய்கள்.. எச்சரிக்கை அவசியம்!

இஞ்சி டிடாக்ஸ் டீ (Ginger Detox Water Recipe)

இஞ்சி இயற்கையான நச்சு நீக்கும் பொருள். இஞ்சியின் உதவியுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை எளிமையாக அகற்றலாம். இஞ்சி டிடாக்ஸ் பானம் யாஹ்யாரிப்பது எப்படி?

இதற்கு முதலில் இஞ்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, இஞ்சி துண்டுகளை தண்ணீரில் போடவும்.
இதற்குப் பிறகு, 2 முதல் 3 நிமிடங்கள் காத்திருக்கவும்.
இஞ்சி சாறு தண்ணீருடன் கலந்தவுடன், தண்ணீரை வடிகட்டவும்.
இதில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து தண்ணீர் குடிக்கவும்.
துளசி மற்றும் செலரி சேர்த்து இஞ்சி டிடாக்ஸ் பானத்தையும் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

எலுமிச்சை மற்றும் தேன் டிடாக்ஸ் டீ (Lemon and Honey Detox Water Recipe)

எலுமிச்சை மற்றும் தேன் உதவியுடன், செரிமானத்தை மேம்படுத்தலாம். இது, பிற நோய் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. எலுமிச்சை மற்றும் தேன் கலந்து டிடாக்ஸ் டீ தயாரிப்பது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதற்கு முதலில், ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
தண்ணீர் கொதித்ததும், தேன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், இதை வெதுவெதுப்பாக பருகவும்.
எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட டிடாக்ஸ் பானத்தை உட்கொள்வதால் சளி மற்றும் இருமல் பிரச்சனையும் நீங்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Milk With Honey: பாலில் தேன் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version