Milk With Honey: பாலில் தேன் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்!

  • SHARE
  • FOLLOW
Milk With Honey: பாலில் தேன் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்!

வயிற்றுக்கு நல்லது

பாலில் தேன் கலந்து குடிப்பதால் நம் உடலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். மேலும் இதனால் உண்டாகும் ஆக்சிஜனேற்றம், வயிற்றில் நல்ல பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது. இது வயிற்றில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. 

எலும்புகளை வலுப்படுத்தும்

உங்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ கவனிப்போடு, பாலில் தேன் கலந்து குடிக்கவும். இந்த கலவையில் உள்ள கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்குறது. 

அமைதியான உறக்கம்

இரவு படுக்கைக்கு செல்லும் முன், பாலுடன் தேன் கலந்து குடிக்க வேண்டும். தேனில் உள்ள இனிப்பு, நன் உடலில் ஒரெக்ஸினை கட்டுப்படுத்தும். இது நல்ல உறக்கத்தை கொடுப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது. 

சுவாச பிரச்சனைகள் தீரும்

பாலில் தேன் கலந்து குடிப்பாதால், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் நீங்கும். இதனால் சுவாசக்குழாயில் தொற்று ஏற்படாது. மேலும் இது தொண்டையில் புண், வறட்டு இருமல் மற்றும் சளி இருமலை கட்டுப்படுத்தும். 

பாலுடன் தேன் கலந்து குடிப்பது, நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுத்தாலும், இதனை அதிகமாக உட்கொள்வதால் ஆப்பத்துகளும் உண்டாகும். மிதமான அளவு முக்கியன். மேலும் நீங்கள் உங்கள் உணவு வழக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்யும் முன் மருத்துவரிடம் கேட்பது நல்லது.

Image Source: Freepik

Read Next

White Butter Benefits: இது தெரிந்தால் கண்டிப்பாக தேடித்தேடி வாங்கி சாப்பிடுவீர்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்