$
White Butter Benefits: வெண்ணெய் என்பது பலரின் உணவில் ஒரு அங்கமாக இருக்கிறது. குறிப்பாக சைவப் பிரியர்களுக்கு இது ஆகச்சிறந்த உணவாகும். வெண்ணெயில் பல வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக வெள்ளை வெண்ணெய், மஞ்சள் வெண்ணெய் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. வெள்ளை வெண்ணெய் ஃப்ரெஷ் க்ரீம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது வெளிர் நிறத்தில் காணப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்
வெள்ளை வெண்ணெய் ஆரோக்கிய நன்மைகள்

குறிப்பாக வெள்ளை வெண்ணெயில் அராச்சிடோனிக் என்ற அமிலம் உள்ளது. இது ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். இது மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியை ஆதரிக்கிறது. எனவே, நல்ல மூளை ஆரோக்கியத்திற்கு வெள்ளை வெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்.
வெள்ளை வெண்ணெயில் உள்ள சத்துக்கள்
வெள்ளை வெண்ணெயில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவற்றுடன் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் வெள்ளை வெண்ணெயில் உள்ளன.
எடையை குறைக்க உதவுகிறது
பெரும்பாலானோர் வெண்ணெயில் கொழுப்புச் சத்து இருப்பதாக நினைக்கிறார்கள். குறிப்பாக இதை சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமோ என நினைத்து பயப்படுகிறார்கள். ஆனால் இது மிக தவறு. ஆரோக்கியமான கொழுப்பு உங்கள் எடை இழப்பிற்கு புரதம் போல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதன்படி வெண்ணெயில் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளது. வெள்ளை வெண்ணெயில் லெசித்தின் நிறைந்துள்ளது. இது ஒரு வகை கொழுப்பு. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு, ஆரோக்கியமாகவும் இருக்க இது மிக முக்கியம்.
எலும்புகளை வலுவாக்கும்
வெள்ளை வெண்ணெய் உங்கள் மூட்டுகளை வலுவாக்க உதவுகிறது. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. அதனால்தான் வெள்ளை வெண்ணெய் மூட்டு வலிக்கான சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. நீங்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டால் ஒரு தேக்கரண்டி வெண்ணெய்யை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கரையக்கூடிய வைட்டமின்கள்
வெண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் கே2 உள்ளிட்ட கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலானோர் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றை நிரப்ப காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளை அணுகுகின்றனர்.
இவை அனைத்தும் இதில் உள்ளது. அதேபோல் வைட்டமின் K2 என்பதை எளிதாக அடைய முடியாது. காரணம் வைட்டமின் K2 பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வெள்ளை வெண்ணெய் சாப்பிடுவதன் மூலம் இது உங்களுக்கு கிடைக்கும்.
ஆரோக்கியமான சருமம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த வெள்ளை வெண்ணெய் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், வெண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
வெள்ளை வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தொற்றுநோய்கள் மற்றும் பிற பிரச்சனைகளை எதிர்த்து போராட உங்கள் உடலை தயார்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!
வெள்ளை வெண்ணெயில் இதில் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருந்தாலும், ஒவ்வாமை அல்லது பிற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் இதை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது.
Image Source: FreePik