
Cucumber Fruit: வெள்ளிரிக்காய் ஆரோக்கிய நன்மைகளை பல நேரங்களில் பல தளங்கள் மூலமாக அறிந்திருப்போம். வெள்ளிரிக்காய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலருக்கும் வெள்ளரிப்பழத்தின் நன்மைகளை அறிந்திருப்பதில்லை. குறிப்பாக வெள்ளரிப்பழத்தை கோடையில் கொளுத்தும் வெயிலில் சாப்பிட்டால் அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளரிப்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். இந்த பழம் தாகம் தீர்க்கும் இயற்கையான வரமாக இருக்கிறது. கோடைக்காலத்தில் பல தெருவோர பழக்கடைகளில் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பழத்திற்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வெள்ளரிப்பழத்தின் நன்மைகளை தெரிந்தவர்கள் கண்டிப்பாக இதை தவறாமல் வாங்கி சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்க: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகுவலியா? அதிலிருந்து விடுபட இந்த யோகாசனங்கள் செய்யுங்க
வெள்ளரிப்பழம் ஆரோக்கிய நன்மைகள்
வெயில் காலத்தில் வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டியது மிக அவசியம். அப்படிப்பட்ட பழங்களில் வெள்ளரிப்பழம் பிரதானமான ஒன்றாகும். வெள்ளரிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதேபோல் வெள்ளரிப்பழத்தில் பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது. மேலும் வெள்ளரிப்பழத்தில் வைட்டமின் பி1, பி6, கே, ஃபோலேட், காப்பர், மெக்னீசியம் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வெள்ளரிப்பழத்தில் நார்ச்சத்து அளவும் மிக அதிகமாகும்.
வெள்ளரிப்பழத்தில் நிரம்பியுள்ள சத்துக்கள்
- வெள்ளரிப்பழத்தில் வெள்ளரிக்காயை போல் நீர்ச்சத்து மிக மிக அதிகமாகும்.
- கோடைக்காலத்தில் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து என்பது மிகுந்த அவசியம்.
- இந்த குறையை போக்க வெள்ளரிப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.
- இந்த பழத்தில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து இருக்கிறது.
- மேலும் வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க வெள்ளரிப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.
வெள்ளரிப்பழம் சுவை என்ன?
வெள்ளரிப்பழத்தின் சுவை என்பது குறிப்பிட முடியாத ஒன்றாக இருக்கும். வெள்ளரிப்பழத்தை சாப்பிட மாவு போன்ற சுவையாக இருக்கும். இதை இனிப்பு, கசப்பு, புளிப்பு என எப்படியும் கூறிவிட முடியாது. அதேபோல் வெள்ளரிப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதில் சிறிதளவு நாட்டுச்சக்கரை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கக் கூடும்.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
முன்னதாகவே குறிப்பிட்டது போல் வெள்ளரிப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருக்கும் காரணத்தினால், ஒரு நபருக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெருமளவு உதவியாக இருக்கக்கூடும்.
உடல் எடை குறைய உதவும்
இந்த காலக்கட்டத்தில் உடல் எடையை குறைக்க பலரும் பெரிதும் பாடுபடுகிறார்கள். இதற்கு வெள்ளரிப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும். வெள்ளரிப்பழம் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாது. காரணம் வெள்ளரிப்பழம் சாப்பிட மாவு போன்ற சுவை கொண்டதாக இருக்கும், இதை சாப்பிடும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கோடையில் பல நோய்கள் எளிதில் தொற்றிக்கொள்ளக் கூடும், இந்த காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிக முக்கியம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெள்ளரிப்பழம் பெரிதும் உதவியாக இருக்கும். இதில் ஏராளமான வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. இந்த பழம் இரத்தத்தின் வெள்ளை அணுக்களை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: ரவா Vs ஓட்ஸ்.. எடை இழப்புக்கு எது சிறந்தது.?
நார்ச்சத்து நிறைந்த பழம்
வெள்ளரிப்பழத்தில் முன்னதாக குறிப்பிட்டது போல் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. நார்ச்சத்து தான் உடலில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கக்கூடும். எனவே வெள்ளரிப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தர நிவாரணம் பெறக்கூடும்.
வெள்ளரிப்பழத்தில் இதுபோன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கக்கூடும். இனி வெள்ளரிப்பழத்தை எங்காவது பார்த்தால் தவறாமல் வாங்கி சாப்பிட முயற்சிக்கவும், உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் கோடை நேரத்தில் வாங்கிக் கொடுக்கவும்.
image source: social media
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version