Omavalli Benefits: ஓமவல்லி இலைகளை சாப்பிடுவது சிறுநீரகங்களை சுத்தப்படுத்துமா?

வீட்டு வாசல் முதல் பல இடங்களில் காணப்படும் ஓமவல்லி இலைகளின் நன்மைகளை பலரும் அறிந்திருப்பதில்லை, குறிப்பாக சிறுநீரகங்கள் ஆரோக்கியத்திற்கு ஓமவல்லி எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Omavalli Benefits: ஓமவல்லி இலைகளை சாப்பிடுவது சிறுநீரகங்களை சுத்தப்படுத்துமா?

Omavalli Benefits: வீட்டு வாசல் முதல் பல இடங்களில் ஓரமாக சின்னதாக வளர்ந்திருக்கக் கூடிய தாவரம் தான் ஓமவல்லி. இதை பலர் லேசாக எடுத்து அதை அப்படியே தண்ணீரில் நனைத்து வாயில் போட்டு மென்று செல்வார்கள். அதேசமயல் பலர் இதை புரந்தள்ளி கண்டுகொள்ளாமல் செல்வார்கள். இதன் நன்மைகளை அறிந்துக் கொண்டால் ஓமவல்லி இலைகளை இனி யாரும் கண்டிப்பாக புறந்தள்ள மாட்டார்கள்.

ஓமவல்லி இலை நன்மைகள்

ஓமவல்லி இலை என்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். காய்ச்சல், சளி பிரச்சனை முதல் சிறுநீரகம், கல்லீரல் என உடலின் பல பாகங்களுக்கும் நன்மை பயக்கக் கூடும்.

மேலும் படிக்க: Mushroom Coffee: உடல் எடை சரசரவென குறைய காளான் காபி மட்டும் குடித்தாலே போதுமாம்!

காய்ச்சல், சளி பிரச்சனை தீரும்

சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனை போக்குவதற்கு ஓமவல்லி ஒரு சிறந்த தீர்வாகும். மெடிக்கலில் உடனே மாத்திரை வாங்கி போடுவதற்கு பதிலாக ஓமவல்லி இலைகளை உட்கொள்ளலாம். ஓமவல்லி இலையை கொதிக்க வைத்து அதன் தண்ணீரை உட்கொள்ளலாம்.

omavalli-benefits-in-tamil

அதேபோல் ஓமவல்லி இலைகளை பயன்படுத்தி தலையில் பத்து போட்டால் சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

செரிமான பிரச்சனை குறையும்

கோடையில் பலர் செரிமான பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை போக்க ஓமவல்லி உட்கொள்ளலாம். குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்சனைக்கும் ஓமவல்லி இலை சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. குடல் இயக்கம், செரிமான பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு ஓமவல்லி சிறந்த தீர்வாகும்.

எடை இழப்பு

ஓமவல்லி தண்ணீரை தினசரி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும். இதனால் எடை கட்டுக்குள் இருக்க பெருமளவு உதவியாக இருக்கும். மேலும் பசியின்மை பிரச்சனையை குணப்படுத்துவதற்கும் ஓமவல்லி பெரும் உதவியாக இருக்கக் கூடும்.

omavalli-daily-sapidalama

ஓமவல்லி சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவுமா?

தவறான வாழ்க்கை முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் பலர் சிருநீரக தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சிறுநீரக தொற்று நோய், சிறுநீரக பாதை தொற்று, நீர் கடுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக ஓமவல்லி இருக்கிறது.

மேலும் படிக்க: Treatment for infertility: குழந்தையின்மைக்கான தற்போதைய சிகிச்சை முறைகள் என்ன? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் விளக்கம்!

சிறுநீரகங்கள் செயல்பட பல மடங்கு மேம்பட ஓமவல்லி சிறந்த தீர்வாக இருக்கிறது. ஓமவல்லி இலைகள் சிறுநீரை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதன்மூலம் சிறுநீரக செயல்பாடு மேம்பட்டு சிறுநீரகங்களை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரகங்களில் சேரும் உப்பு, அழுக்கு படிவம் ஆகியவற்றை வெளியேற்றுவதற்கு ஓமவல்லி சிறந்த தீர்வாக இருக்கிறது.

image source: social media

Read Next

இரவில் இந்த பழங்களை மட்டும் சாப்பிடவே கூடாது.!

Disclaimer

குறிச்சொற்கள்