Mushroom Coffee: உடல் எடை சரசரவென குறைய காளான் காபி மட்டும் குடித்தாலே போதுமாம்!

சமீபகாலமாக மக்களிடையே காளான் காபி பிரபலமாகி வருகிறது. அது என்ன காளான் காபி, இதன் நன்மைகள் என்ன, இதன் நுகர்வு உண்மையில் ஆரோக்கியத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Mushroom Coffee: உடல் எடை சரசரவென குறைய காளான் காபி மட்டும் குடித்தாலே போதுமாம்!

Mushroom Coffee: உணவு முறையில் தேநீர் என்பது பிரித்து பார்க்க முடியாத ஒன்றாகும். தேநீர் உடன் தங்களது தினத்தை பலரும் தொடங்குவார்கள். நண்பர்களைச் சந்தித்தால் டீ, காபி, யாரிடமாவது அரட்டையடிக்கும் நேரத்தில் டீ, காபி, விருந்தினர் வீட்டுக்கு வந்தால் டீ, காபி, பணிகளுக்கு நடுவில் டீ, காபி என எப்போதும் நம் வாழ்வியலில் டீ, காபி இடம்பெற்றிருக்கிறது.

இதன் சிறப்பு என்னவென்றால், காபி போக்குகள் என்பது தினமும் மாறுகின்றன. பல நேரத்தில் பலர் பல விதமாக காபியை விரும்புகிறார்கள், பிளாக் காபி, கிரீன் டீ, மசாலா காபி என பல விதமான காபியை மக்கள் விரும்புகிறார்கள், இதில் தற்போது சேர்ந்துள்ளது காளான் காபி. பலருக்கும் காளான் காபியா என ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது உண்மைதான். காளான் காபி என்பது சமீபகாலமாக மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

மேலும் படிக்க: Treatment for infertility: குழந்தையின்மைக்கான தற்போதைய சிகிச்சை முறைகள் என்ன? - மருத்துவர் ரம்யா ராமலிங்கம் விளக்கம்!

காளான் காபி என்றால் என்ன?

காளான் காபி ஒரு சிறப்பு வகை காளானில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சாகா, லயன்ஸ் மேன், ரெய்ஷி மற்றும் கார்டிசெப்ஸ் போன்ற காளான்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வழக்கமான காபியுடன் ஒப்பிடும்போது, இதில் காஃபின் மிகவும் குறைவு.

kalan-coffee-udal-edai-kuraikkuma

குறைந்த காஃபின் உள்ளடக்கம் காரணமாக, காளான் காபி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காபியை உட்கொள்வது அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் காளான்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் காளான் காபியை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காளான் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காளான்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா-குளுக்கன் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. சாதாரண காபிக்கு பதிலாக காளான் காபியை உட்கொண்டால், அது நோய்களைத் தடுக்கிறது. மேலும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலிலிருந்தும் இது நிவாரணம் அளிக்கிறது.

காளான் காபியில் சாதாரண காபியை விட குறைவான காஃபின் உள்ளது. இதை உட்கொள்வதால் அமைதியின்மை மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

kalan-coffee-nanmaigal

சாதாரண காபியில் அதிக அளவு காஃபின் இருப்பதால், அது வாயு, மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் காளான் காபியில் ப்ரீபயாடிக்குகள் உள்ளன, அவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

இந்த காபி ரெய்ஷி காளானில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ரெய்ஷி காளான்கள் மன அழுத்தத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. காளான் காபி குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

காளான் காபி தயாரிப்பது எப்படி?

காளான் காபியின் பல பிராண்டுகள் சந்தையில் கிடைக்கிறது. நீங்கள் இதை சாதாரண காபியைப் போலவே பால், சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். உங்கள் ரசனைக்கு ஏற்ப காளான் காபியின் செய்முறையையும் மாற்றலாம்.

மேலும் படிக்க: Parenting Tips: உங்க குழந்தை புத்திசாலியா வளரணுமா? - மனநல நிபுணர் சொல்லுறத கேளுங்க..!

காளான் காபி யாரெல்லாம் குடிக்கக் கூடாது?

  • கர்ப்ப காலத்திலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் காளான் காபியை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
  • குறிப்பிட்ட வகை மருந்துகளை உட்கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே காளான் காபியை உட்கொள்ள வேண்டும்.

image source: freepik

Read Next

40 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு கிடுகிடுவென எடை ஏற காரணம் என்ன? - வெயிட்டை கட்டுக்குள் வைக்க ஈசி டிப்ஸ்!

Disclaimer

குறிச்சொற்கள்