கர்ப்பிணி பெண்கள் மஸ்ரூம் காபி குடிப்பது நல்லதா? அப்படி குடிச்சா என்னாகும்? டாக்டர் தரும் டிப்ஸ் இதோ

Can pregnant women safely consume mushroom coffee: கர்ப்ப காலத்தில் பெண்கள் காளான் காபி குடிப்பது பாதுகாப்பானதாக அமைகிறது. ஆனால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். இதில் கர்ப்பிணி பெண்கள் காளான் காபி குடிப்பது நல்லதா? என்பதையும், அதன் நன்மைகள், விளைவுகள் குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கர்ப்பிணி பெண்கள் மஸ்ரூம் காபி குடிப்பது நல்லதா? அப்படி குடிச்சா என்னாகும்? டாக்டர் தரும் டிப்ஸ் இதோ


Mushroom coffee during pregnancy what expert says: கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் உணவுமுறைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, இந்த காலத்தில் அவர்கள், என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் பெண்கள் என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும், கருவுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இந்நிலையில் அவர்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ளவில்லை எனில், குழந்தைகளின் வளர்ச்சி தடைபடுகிறது.

எனினும், கர்ப்ப காலத்தில், பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வு செய்கின்றனர். அதே சமயம், ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் பொருள்கள் எடுத்துக் கொள்வதை அவர்கள் தவிர்க்கின்றனர். இந்நிலையில், கர்ப்ப காலத்தில் பெண்கள் காளான் காபி குடிக்கலாமா என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகும். காளான் காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மேலும் இந்த காபி குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. மஸ்ரூம் காபியில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. ஆனால், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த காபி நன்மை பயக்குமா? அல்லது இதன் நுகர்வு கருப்பையில் வளரும் குழந்தைக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து திவ்யா காந்தியின் டயட் & நியூட்ரிஷன் கிளினிக்கின் உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா? - இந்த 5 பிரச்சனைகள் குறித்து எச்சரிக்கும் நிபுணர்...!

கர்ப்ப காலத்தில் காளான் காபி சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் காளான் காபி குடிப்பது ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், இவர்கள் உட்கொள்ளும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில், காளான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் பயன்படுத்தக்கூடிய சாகா, ரெய்ஷி போன்ற மருத்துவ காளான்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆகும்.

இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆற்றாய் அதிகரிக்கவும் மற்றும் மனநிலையை சிறப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால், காளான் காபியிலும் காஃபின் உள்ளடக்கம் உள்ளது. கர்ப்ப காலத்தில் காஃபின் அளவு குறித்து கவனம் செலுத்துவது முக்கியமாகும். ஏனெனில், அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது குழந்தையின் குறைந்த எடை பிறப்பு போன்ற அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

கர்ப்ப காலத்தில் காளான் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • கர்ப்பிணி பெண்கள் காளான் காபி குடிப்பதால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இது நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இது பிறக்காத குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
  • காளான் காபியில் குறைந்த அளவிலான காஃபின் உள்ளது. இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு காளான் காபி ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. இது குறைவான பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
  • மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இத்தகைய கூறுகள் காளான்களில் காணப்படுகிறது. மேலும் இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
  • கர்ப்ப காலத்தில் காளான் காபி குடிப்பது உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் துளசி தேநீர் குடிக்கலாமா.? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்..

கர்ப்ப காலத்தில் காளான் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

  • காஃபின் ஒருவருக்குப் பொருந்தவில்லை எனில், அவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான காஃபின் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தைக் கெடுக்கலாம்.
  • காளான் காபியின் புத்துணர்ச்சியையும் கவனித்துக் கொள்வது அவசியமாகும். மேலும் காபியில் மோசமான காளான்களைப் பயன்படுத்தினால் அது பெண்ணின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடும்.
  • கர்ப்பிணிப் பெண் ஏதேனும் மருந்தை உட்கொண்டாலோ அல்லது ஏதேனும் ஒவ்வாமை இருந்தாலோ அதை உட்கொள்ளக்கூடாது. இது மருந்தின் விளைவை மோசமாக பாதிக்கலாம்.

நிபுணர் பரிந்துரை

காளான் காபி ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருப்பினும், கர்ப்ப காலத்தில் உட்கொள்ளலாம் என்றாலும், ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் வேறுபட்டது என்பதையும், ஒவ்வொருவரின் உடல் தேவைகளும் வேறுபட்டவை என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். எனவே, உணவில் புதிதாக ஏதாவது சேர்க்கும் போதெல்லாம் மருத்துவரை அணுகுவது நல்லது. காளான் காபியின் சூழலிலும் இதை மனதில் கொள்வது அவசியமாகும். காபி குடிக்கும் போது உடல்நலம் மோசமடையவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டால், காளான் காபி குடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பிணிகள் மறந்தும் இந்த பழங்களை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

தாய், சேய் இருவரின் நலனுக்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் யோகா செய்யணும்! நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Disclaimer