Omavalli Leaf: வியப்பூட்டும் பலன்தரும் ஓமவல்லி இலை.!

  • SHARE
  • FOLLOW
Omavalli Leaf: வியப்பூட்டும் பலன்தரும் ஓமவல்லி இலை.!

அந்த வகையில் பல பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு என்ற விதமாக, ஓமவல்லி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம். மேலும் இதன் மூலம் எந்த நோய்கள் குணமாகும் என்பதையும் இங்கே காண்போம். 

காய்ச்சல் தீரும்

சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது, மருந்து மாத்திரை பின்னால் ஓடாமல், இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம். இதற்கு ஓமவல்லி இலை சிறந்த தேர்வாக இருக்கும்.  குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது, ஓமவல்லி இலையை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி கொடுக்கவும். 

தலைவலி நீங்கும்

அதீத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஓமவல்லி இலை பயன்படுத்தவும். இதற்கு ஓமவல்லி இலையை எடுத்து, நன்கு சுத்தம் செய்து, திட்டுதிட்டாக அரைத்துக்கொள்ளவும். இதனை நெற்றியில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுபான நீரில் முகத்தை கழுவவும். இது தலைவலிக்கு சிறந்த மருந்தாக திகழும்.

நெஞ்சு சளி போகும்

நெஞ்சு சளி பிரச்னையில் இருந்து விடுபட ஓமவல்லி இலை உதவும். இதற்கு ஓமவல்லி இலையை அரைத்து, சாற்றை பிரித்து, அதில் தேன் கலந்து குடிக்கவும். இது நெஞ்சு சளியை அடியோடு அகற்றும். 

இதையும் படிங்க: Vadha Narayana Keerai: வாத நோயின் வரமாக திகழும் வாதநாராயணன் கீரை!

செரிமானம் மேம்படும்

அஜீரண கோளாறு இருந்தால், வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இது வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல், வாயு பிரச்னை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இதில் இருந்து விடுபட, ஓமவல்லி இலை சிறந்த தேர்வாக இருக்கும். ஓமவல்லி இலையை கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரை குடித்து வந்தால், குடல் இயக்கம் சீராகி, செரிமானம் மேம்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. 

எடை இழப்பு

தினமும் ஓமவல்லி தண்ணீரை குடித்து வந்தால் செரிமானம் மேம்படும். இதனால் எடை கட்டுக்குள் இருக்கும். குறிப்பாக பசியின்மை பிரச்னை இருந்தாலும், அதனை குணப்படுத்த ஓமவல்லி இலை உதவும்.  

சிறுநீர் தொற்று

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக பெண்கள் அதிகமாக சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற சூழலில் ஓமவல்லி இலை உங்களுக்கு உதவியாக இருக்கும். சிறுநீர் பாதை தொற்று, நீர் குத்தல், நீர் கடுப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, ஓமவல்லி இலை கொதிக்க வைத்த நீரை குடிக்கவும். இது நல்ல முடிவை கொடுக்கும். 

Read Next

Vadha Narayana Keerai: வாத நோயின் வரமாக திகழும் வாதநாராயணன் கீரை!

Disclaimer

குறிச்சொற்கள்