Health Benefits Of Vadha Narayana Keerai: வாதநாராயணன் கீரை சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இதற்கு டெலோனிக்ஸ் எலாட்டா என்ற அறிவியல் பெயர் உள்ளது. மேலும் இது வொய்ட் குல்மோஹர் என்றும் அழைக்கப்படுகிறது. இது கசப்பான சுவை கொண்டது. அதன் மருத்துவ குணங்கள் காரணமாக ஆயுர்வேத சிகிச்சையில் வாதநாராயணன் கீரை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
முடக்குவாதம் தீர்வு
முடக்குவாதம் நோய் உள்ளவர்களுக்கு வாதநாராயணன் கீரை நல்ல மருந்தாக திகழ்கிறது. இதற்கு வாதநாராயணன் கீரையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்துக்கொள்ளவும். மென்மையான பருத்தி துணியை இதில் நனைத்து வலி இருக்கும் இடத்தில் தடவும். இது முடக்குவாதத்திற்கு சிறந்த தீர்வாக திகழ்கிறது.

பக்கவாதம்
பக்கவாதம் ஏற்படும் முன் மூளையில் சில அறிகுறிகள் ஏற்படும். இது போன்ற நேரங்களில் மருத்துவரை நாடுவது நல்லது. இதில் இருந்து வெளிவர வாதநாராயணன் கீரை உதவியாக இருக்கும். இதற்கு வாதநாராயணன் கீரையை நன்கு காயவைத்து, பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இதனை தினமும் இரவு படுகைக்கு செல்லும் முன் நீரில் கலந்து குடித்து வரவும். இது போல் செய்து வர, பக்கவாதம் நீங்கும்.
இதையும் படிங்க: பல் வலியிலிருந்து விடுபட வீட்டு வைத்தியம்
வாத நீர் வெளியேறும்
மூட்டுகளில் தேங்கியிருக்கும் வாத நீரை வெளியேற்ற வாதநாராயணன் கீரை சிறந்து திகழ்கிறது. இதற்கு வாதநாராயணன் கீரையை துவையாலாக்கி சாப்பாட்டில் சேர்த்து வர வேண்டும். இது வாத நீரை மலம் வழியாக வெளியேற்றும். மேலும் மாதம் ஒரு முறை வாதநாராயணன் கீரை பொடியை விளக்கெண்ணெய் உடன் சாப்பிட்டு வரவும். இது வாத நீரை வெளியேற்ற சிறந்த வழி.
நரம்புத்தளர்ச்சி தீரும்
உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி இருந்தால், நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் வாதநாராயணன் கீரை தைலத்தை தினமும் குடித்துவரலாம். இதற்கு வாதநாராயணன் கீரையை நன்கு அரைத்து, அதன் சாந்தை எடுத்துக்கொள்ளவும். இதனுடன், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மூட்டு வீக்கம், வாதம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
Image Source: Freepik