$
Ways To Get Rid Of Tooth Pain At Home: உடலில் ஏற்படும் கைவலி, கால்வலியைக் காட்டிலும் பல்வலி மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். சிலர் அடிக்கடி பல்வலியால் பாதிக்கப்படுவர். சிலருக்கு அவ்வப்போது ஏற்படலாம். பல்வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இதில் பற்களைச் சுற்றிலும், தாடையிலும் மிகுந்த வலி ஏற்படலாம். பற்சிதைவு அதாவது பற்சொத்தை என்பது பற்களை சிறிது சிறிதாக அரித்து பற்களையே சிதைத்து விடும் நிலை ஏற்படலாம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல் வலியைக் குணப்படுத்தலாம்.
பல்வலிக்கான பொதுவான காரணங்கள்
அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருள்களான பிஸ்கட், சாக்லேட், அதிக இனிப்பு உணவுகளை உட்கொள்வது, உணவு உண்ட பிறகு வாயைச் சரியாகக் கழுவாமல் இருப்பது போன்றவற்றால் பற்களைச் சேதப்படுத்தும் பாக்டீரியாக்கள் பற்சிதைவை ஏற்படுத்தலாம். இதனால் பற்கள் மற்றும் ஈறுகளில் வலி உண்டாகலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Remedies: தீராத வயிற்று வலி சீக்கிரம் குணமாக இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
பல்வலியை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் பல்வலியை நீக்க முடியும்.
பூண்டு
பூண்டு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இதில் நிறைந்துள்ள அல்சின் என்ற பொருள் ஆன்டி பாக்டீரியல் தன்மை நிறைந்ததாகும். எனவே பல்வலி உள்ளவர்கள் பூண்டு பற்களை நசுக்கி சிறிது உப்பு சேர்க்க வேண்டும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் சேர்த்துக் கொள்வது பல் வலி விரைவில் குணமாகும்.

உப்பு நீர் கொப்பளிப்பு
நீரில் கல் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை வெதுவெதுப்பாக்கி இந்த தண்ணீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கலாம். இது வாயின் இடுக்குகளில் உள்ள கிருமிகளை அகற்றுகிறது. மேலும் இந்த முறையால் பல்வலியில் ஏற்படும் வீக்கம், தொண்டைப்புண் போன்றவற்றை குணப்படுத்தலாம்.
புதினா டீ
கிராம்பு மற்றும் புதினாவில் பல்வலியை குணப்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் புதினாவில் நிறைந்துள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் பல் வலியைக் குணப்படுத்துவதுடன், வாய்க்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். சில துளிகள் புதினா எண்ணெயை காட்டன் பஞ்சு ஒன்றில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Home Remedies: ஈஸியா தொப்பை குறைய சிம்பிளான வீட்டு முறைகள் இதோ
கிராம்பு
கிராம்பு அழற்சி எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மைகளைக் கொண்டுள்ளது. இது பல் வலியைக் குணப்படுத்தவும், பற்களை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. சிறிய காட்டன் பஞ்சு ஒன்றில் கிராம்பு எண்ணெய் எடுத்து பற்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லயெனில் முழு கிராம்பையும் வாயில் வைத்து மென்று சாப்பிட, இதன் சாற்றை பல் வலி உள்ள இடத்தில் படுமாறு செய்வது நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு மென்று சாப்பிட முடியாதவர்கள் அதை அப்படியே பல் வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம்.

ஐஸ்தெரபி
பல்வலியைக் குணப்படுத்த ஐஸ்கட்டிகள் பயன்படுத்துவதை பலரும் பார்த்திருப்போம். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஐஸ்கட்டியை எடுத்து அதை ஒரு கைக்குட்டை அல்லது ஏதேனும் துணி அல்லது ஐஸ் பையில் வைத்து கன்னங்களுக்கு அருகில் வைக்கலாம். இவை ஈறுகளின் வீக்கத்தைக் குறையத் தொடங்குகிறது. இதன் மூலம் பல்வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
கொய்யா இலைகள்
கொய்யா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வலி ஏற்பட்டால் கொய்யா இலைகளை மென்று சாப்பிடலாம். இது படிப்படியாக நிவாரணத்தைத் தருகிறது. இது தவிர, கொய்யா இலைகளை வேகவைத்து வடிகட்டி பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு வாயைக் கழுவலாம்.
இந்த வீட்டு வைத்தியங்களைக் கொண்டு பல் வலியை விரைவில் குணப்படுத்தலாம். இவை பல்வலி,, ஈறு வலி போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?
Image Source: Freepik