Belly Fat Home Remedies: ஈஸியா தொப்பை குறைய சிம்பிளான வீட்டு முறைகள் இதோ

  • SHARE
  • FOLLOW
Belly Fat Home Remedies: ஈஸியா தொப்பை குறைய சிம்பிளான வீட்டு முறைகள் இதோ


Belly Fat Loss Home Remedies: ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, நீண்டநேரம் உட்கார்ந்த முறை போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அதில் ஒன்றாகவே அதிக உடல் எடையும் உள்ளது. இந்த உடல் எடையை வேகமாகக் குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர், கடுமையான டயட்டைப் பின்பற்றியும், அதிகளவில் உடற்பயிற்சி செய்த பிறகும், எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக தொப்பைக் கொழுப்பைக் குறைப்பதென்பது பலருக்கும் கடினமான ஒன்றாக உள்ளது. இந்த தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும், சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

தொப்பைக் கொழுப்பு குறைய உதவும் வீட்டு வைத்தியங்கள்

முழு தானிய உணவுகளின் பங்கு

முழு தானிய உணவுகள் இயற்கையாகவே மிகவும் சத்தான மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைத் தவிர, வயிறு நிரம்பிய முழுமையான உணர்வைத் தருகிறது. மேலும், அதிக கலோரி உணவுகளுக்கான பசியைக் குறைக்கிறது. எனவே, அதிக நார்ச்சத்துள்ள முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்

சீரகத் தண்ணீர் குடிக்கலாமா

தினமும் காலையில், முந்தைய நாள் இரவு முழுவதும் ஊற வைத்த சீரகத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது வயிற்றில் உள்ள கொழுப்பை எரிக்கும் பானமாக உள்ளது. வெறும் வயிற்றில் இந்நீரை அருந்துவது செரிமான மேம்பாட்டிற்கு உதவுவதுடன், வயிறு வீக்கம் அடைவதை அகற்ற உதவுகிறது. மேலும், இது தொப்பை கொழுப்பை அகற்ற பயனுள்ள முறையாகும்.

யோகா அல்லது தியானம் செய்தல்

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை, உடலில் கார்டிசோல் என்ற கொழுப்பைத் தூண்டும் ஹார்மோன்களை உண்டாக்குகிறது. இதன் நீடித்த நிலைகள், நமக்கு பசி உணர்வை தூண்டலாம். மேலும், அதிக கலோரி உணவுகளுக்கான பசியை அதிகரிக்கலாம். இது, அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கிறது. இந்த மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தால் ஏற்படும் உடல் எடையைக் குறைக்க தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ஏன் குர்குமின்?

குர்குமின் உள்ள உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. பொதுவாக, உடல் பருமன் ஒரு அழற்சி நிலையாகக் கருதப்படுகிறது. எனவே, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்ட உணவுப் பொருள்களுடன், உடல் எடையைக் குறைக்கலாம். அதன் படி, இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த குர்குமின் போன்ற மசாலாப் பொருள்கள், ஜிங்கிபெரேசியே, அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகளுடன் உடல் பருமன் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. எடை இழப்பிற்கு இவை சிறந்த தேர்வாக இருப்பினும், இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Neck Remedies: கழுத்துப் பகுதி கருப்பா இருக்கா? தேனை இந்த வழிகளில் பயன்படுத்துங்க.

புரதச்சத்து நிறைந்த உணவு தேர்வு

புரதங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றல் தருவதில் முக்கிய ஆதாரமாகும். எனவே, காலை உணவில் புரதத்தைச் சேர்ப்பது, தசை உருவாக்கத்திற்கும், நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வையும் தருகிறது. இதில் கலோரி உட்கொள்ளல் எண்ணிக்கையைக் குறைக்கிறது. புரோட்டீன்கள் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைச் சேர்த்துக் கொள்வது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. சாதாரண எலுமிச்சை நீருக்குப் பதில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம்.

தண்ணீர் குடிப்பதால் உடல் எடையைக் குறைக்கலாமா?

எந்தவொரு எடை இழப்பு பிரச்சனைக்கும் தண்ணீர் மிக முக்கியமானதாகும். இது நம்மை நீரேற்றமாக வைக்க உதவுவதுடன், உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான பசியை நீக்குகிறது. எனவே, உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பது அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வதைத் தடுக்கலாம். இது தொப்பைக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

Image Source: Freepik

Read Next

Neem Powder Benefits: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்கும் வேப்பம்பூ பொடி. எப்படி பயன்படுத்துவது?

Disclaimer