Doctor Verified

Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்

  • SHARE
  • FOLLOW
Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்


குழந்தையின் உடலில் தண்ணீர் இல்லாத போதும், வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே குழந்தையின் உணவு முறையில் அதிக கவனம் தேவை. குழந்தைக்கு வாந்தி, எரிச்சல், காய்ச்சல் போன்றவை ஏற்படும் போதும் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவர். குழந்தை வயிற்றுப்போக்கை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

குழந்தை வயிற்றுப்போக்கை குணப்படுத்த வீட்டு வைத்தியம்

வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைக் கொண்டு குழந்தைக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை விரைவாகக் குணப்படுத்தலாம்.

தேங்காய் தண்ணீர்

பொதுவாக தேங்காய் நீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது குழந்தையை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. மேலும், தேங்காய் நீரை குழந்தைக்குத் தருவது குழந்தையின் மெல்லிய மலத்தை கெட்டியாக மற்றும் கடினமாக மாற்றுகிறது. மேலும், தேங்காய் நீரில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்துகிறது. மேலும், இது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு இல்லாத நேரத்திலும் குழந்தைக்கு தேங்காய் தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தைக்கு ஆற்றலைத் தருகிறது.

தயிர் மற்றும் சீரகம்

தயிர் சிறந்த புரோபயாடிக் உணவாகும். இது வயிற்றுக்கு மிகவும் நன்மை தருகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. அதன் படி, தயிருடன், வறுத்த சீரகப் பொடியைக் கலந்து குழந்தைக்குக் கொடுக்க வயிற்றுப்போக்கை குணப்படுத்தலாம். மேலும், இதில் சேர்க்கப்படும் சீரகம் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தயிர் மற்றூம் சீரகம் சேர்த்து குழந்தைக்குக் கொடுப்பது வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது.

அரிசி நீர்

பொதுவாக அரிசி நீர் சருமம், முடி என பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதனுடன் உடல்நல ஆரோக்கியத்திற்கும் அரிசி நீர் உதவுகிறது. குழந்தைகளுக்கு அரிசி நீர் தருவது மாவுச்சத்தின் அளவை அதிகரிப்பதுடன், குழந்தையின் உடலில் உள்ள மாவுச்சத்து குறைபாட்டை நீக்க உதவுகிறது. இதை உணவளிப்பது அடிக்கடி மலம் வராமல் தடுக்கிறது. இதற்கு, அரிசியை வேகவைத்து பின் தண்ணீரை நன்றாக வடிகட்டி, அதன் தண்ணீரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது வயிற்றுப்போக்கு பிரச்சனையைத் தீர்க்கும்.

இந்த பதிவும் உதவலாம்: High Birth Weight: அதிக உடல் எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

மசூர் தால் சூப்

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் வயிற்றுப்போக்கினால் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, இது அவர்களின் உடலில் உள்ள திரவத்தைக் குறைக்கிறது. எனவே, திரவங்கள் உடலைச் சென்றடைய பருப்பு தண்ணீர் அல்லது பருப்பு சூப் கொடுக்கலாம். இது குழந்தையின் வயிற்றுப்போக்கு பிரச்சனையை விரைவில் குணப்படுத்தும். முதலில் பருப்பை தண்ணீர் சூப் போல் கொதிக்க விட வேண்டும். பின் கொதித்த பருப்பில் உள்ள தண்னீரை சூப் வடிவில் கொடுக்கலாம். இது வயிற்றுப்போக்கு பிரச்சனையை விரைவில் தீர்க்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும். இது வயிற்றுப்போக்குக்கான முக்கிய மருந்தாக உள்ளது. ஆனால், வாழைப்பழத்தை ஊட்டும் போது, வாழைப்பழம் மஞ்சள் நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே சமயம், குழந்தை ஜீரணிக்கக் கூடிய அளவு மட்டுமே கொடுக்க வேண்டும்.

மேலும், குழந்தைக்கு பச்சை வாழைப்பழத்தைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், இது வயிற்றுப்போக்கை குணப்படுத்துவதற்கு பதில் பிரச்சனையை உண்டாக்கலாம். மேலும் பழுத்த வாழைப்பழத்தில் தாதுப்பொருள்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன. இது குழந்தைக்கு நன்மை தருவதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Premature Baby Care Tips: குறைமாத குழந்தைகளைப் பராமரிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள்

எலுமிச்சை நீர்

குழந்தைகளின் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது குழந்தைகளை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. குழந்தைக்க் வெறும் எலுமிச்சைச் சாறுக்கு பதில், சிறிது தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

உப்பு சர்க்கரை நீர்

இது ஒரு வாய்வழி சிகிச்சையாகும். இது ஒரு வகையான எலக்ட்ரோலைட் ஆகும். இந்த முறை உடலின் முக்கிய செயல்பாடுகளை செய்ய வைக்கிறது. குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருப்பின், உப்பு மற்றும் சர்க்கரை சமஅளவு கலந்த தண்ணீரைக் கொடுக்கலாம். வயிற்றுப்போக்கின் போது, குழந்தையின் உடலிலிருந்து திரவங்கள் இழக்கப்படுவதால், உடல் நீரிழப்பு மற்றும் பலவீனத்தை உண்டாக்கும். இந்த உப்பு சர்க்கரை நீர் குழந்தையின் உடலை நீரேற்றமாக வைப்பதுடன், வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குழந்தை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருப்பின், பெற்றோர்கள் உப்பு, சர்க்கரை கலந்த நீரைக் கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

Image Source: Freepik

Read Next

குழந்தைகளின் சிறுநீர் பிரச்சனையை போக்க வீட்டு வைத்தியம்!

Disclaimer