Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

கர்ப்ப கால பராமரிப்பை விட பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் அதிக அளவு கவனம் தேவை. பிறந்த குழந்தைகளுக்கு வரும் விக்கல், தாய்ப்பால் கொடுப்பது, குழந்தை அழுவது போன்ற அனைத்து செயல்களையும் மிகப் பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் விக்கல், சில பிரச்சனைகளால் ஏற்படலாம். இந்த விக்கலை நிற்க வைப்பதற்கு சில பாதுகாப்பான முறைகளைக் கையாள வேண்டும். இதில் பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்துவதற்கான முறைகளைக் காணலாம்.

குழந்தைகளுக்கு வரும் விக்கல் நிறுத்த செய்ய வேண்டிய முறைகள்

விக்கல் என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருந்தாலும், பிறக்கும் குழந்தைகளுக்கு முக்கியமானதாகும். குழந்தை பிறந்தது முதல் ஒரு வருடம் வரையே விக்கல் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகும் விக்கல் தொடர்ந்து வந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதில் பிறந்த குழந்தைகளுக்கு வரும் விக்கல் நிறுத்த செய்ய வேண்டிய சில முறைகளைக் கையாள வேண்டும். அவற்றைப் பற்றிக் காணலாம்.

குழந்தையை நிமிர வைத்தல்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுத்த பிறகு, குழந்தையை நிறுத்தி வைப்பது நல்லது. இவ்வாறு நிறுத்தி வைப்பதால், குழந்தை வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்ட காற்று வெளியேற உதவுகிறது. இது அவர்களுக்கு பால் குடித்த பின் வரக்கூடிய விக்கலை நிறுத்த உதவுகிறது.

முதுகில் தேய்த்து விடுதல்

குழந்தைகள் பால் குடித்த முடித்த உடன், அதன் முதுகில் தேய்த்து விட வேண்டும். இது குழந்தைகளுக்கு மென்மையான அனுபவத்தை உண்டாக்கும். இது விக்கல் ஏற்படுவதிலிருந்து விடுபட வைக்கிறது. இந்த நிலைகளின் மூலம் குழந்தைகளுக்கு விக்கல் உண்டாவதைத் தவிர்க்க முடியும்.

மெதுவாக பால் அருந்த வைத்தல்

குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது வேகமாகப் பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது, அதன் வயிறு விரிவடைந்து உதரவிதானத்திற்கு எதிராகத் தள்ளுவதாக இருக்கும். இதுவே குழந்தைகளுக்கு விக்கல் உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்க்க, மெதுவாக பால் அளிக்கும் புட்டிபாட்டில்களைப் பயன்படுத்தலாம்.

குழந்தையின் நிலையை மாற்றுதல்

அடிக்கடி குழந்தைகளுக்கு விக்கல் வரும் போது, குழந்தைகள் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது விக்கல் நிற்பதற்கான வாய்ப்பு அதிகம் உண்டாகும். அதே போல, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து கொள்வது முக்கியம். இதுவே, குழந்தைகள் புட்டிப்பால் குடிக்கும் போது, குழந்தையை நிமிர்ந்த நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். இந்த நிலைகளில் வைத்து பால் அருந்தும் போது வயிற்றில் காற்று நுழைவது தடுக்கப்படுகிறது.

ஏப்பம் வரும் வரை பராமரித்தல்

குழந்தைகள் பால் குடித்த பிறகு, ஏப்பம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இது வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். இவ்வாறு செய்யும் போது குழந்தைகளுக்கு விக்கல் வருவதைத் தடுக்கலாம்.
இது போன்ற நிலைகளின் மூலம் குழந்தைகளுக்கு வரும் விக்கலை சுலபமாக நிறுத்த முடியும்.

Image Source: Freepik

Read Next

New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content