How to Stop Hiccups for Newborn Baby: பொதுவாக, கர்ப்ப கால பராமரிப்பைக் காட்டிலும் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் அதிகளவு கவனமாக இருப்பது அவசியமாகும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு பிரச்சனைகளையும் அலட்சியமாக விடாமல், அதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதன் படி, பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படும் போது, குழந்தைகள் அழுவது உள்ளிட்ட ஒவ்வொரு செயல்படுகளையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
இதில் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாக விக்கல் அமைகிறது. விக்கல் ஏற்படுவதற்குப் பொதுவானதாக இருப்பினும், குழந்தைகளுக்குச் சில பிரச்சனைகளால் விக்கல் ஏற்படலாம். இந்த விக்கலை நிறுத்துவதற்கு சில பாதுகாப்பான முறைகளைக் கையாள வேண்டியது அவசியமாகும். அதன் படி, பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த தாய்மார்கள் அல்லது குழந்தைகளின் பாதுகாவலர்கள் பின்பற்ற வேண்டிய முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Strong Bones Oil: குழந்தைகளின் எலும்பை வலுவாக்க இந்த 5 எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்க
குழந்தைகளுக்கு விக்கல் நிற்க என்ன செய்வது?
பொதுவாக, குழந்தை பிறந்தது முதல் ஒரு வருடம் வரையே விக்கல் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். எனினும், அதன் பிறகும் விக்கல் தொடர்ந்து வருமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதில் பிறந்த குழந்தைகளுக்கு வரும் விக்கலை நிறுத்த செய்ய வேண்டிய சில முறைகளைக் கையாள வேண்டும். அதைப் பற்றிக் காணலாம்.
மெதுவாக பால் அருந்த வைப்பது
குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது வேகமாகப் பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல, குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது வயிறு விரிவடைந்து உதரவிதானத்திற்கு எதிராகத் தள்ளுவதாக அமைகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாக்குகிறது. இதனைத் தவிர்க்க, மெதுவாக பால் அளிக்கும் புட்டிபாட்டில்களைப் பயன்படுத்த வேண்டும்.
முதுகில் தேய்த்து விடுவது
குழந்தைகள் பால் குடித்த முடித்த பிறகு, அவர்களின் முதுகில் தேய்த்து விட வேண்டும். இவ்வாறு முதுகில் தேய்ப்பது குழந்தைகளுக்கு மென்மையான அனுபவத்தை உண்டாக்கும். இது விக்கல் ஏற்படுவதிலிருந்து விடுபட வைக்கிறது. இந்நிலையின் மூலம் குழந்தைகளுக்கு விக்கல் உண்டாவதைத் தவிர்க்கலாம்.
ஏப்பம் வரும் வரை பராமரிப்பது
குழந்தைகள் பால் குடித்த பிறகு எப்போதும் ஏப்பம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இவை வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு விக்கல் வருவதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Earbuds For Babies: குழந்தைகளின் காதுகளை சுத்தம் செய்ய இயர்பட் யூஸ் பண்றீங்களா? முதல்ல இத பாருங்க
குழந்தையை நிமிர வைப்பது
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுத்த பிறகு, குழந்தையை நிற்க வைக்க வேண்டும். பால் கொடுத்த பிறகு நிற்க வைப்பது, குழந்தை வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்ட காற்று வெளியேற உதவுகிறது. இது அவர்களுக்கு பால் குடித்த பிறகு வரக்கூடிய விக்கலை நிறுத்த உதவுகிறது.
குழந்தையின் நிலையை மாற்றுதல்
குழந்தைகளுக்கு அடிக்கடி விக்கல் வரும் போது, குழந்தைகள் இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். இதன் மூலம் விக்கல் நிற்பதற்கான வாய்ப்பு அதிகம் உண்டாகலாம். அதே சமயம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதன் படி, குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது, குழந்தையை நிமிர்ந்த நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். இந்நிலையில் வைத்து பால் கொடுக்கும் போது, குழந்தைகளின் வயிற்றில் காற்று நுழைவது தடுக்கப்படுகிறது.
மருத்துவரை எப்போது நாடலாம்?
பெரும்பாலான விக்கல்கள் பாதிப்பில்லாதவை ஆகும். எனினும், உணவளிக்கும் போது விக்கல் ஏற்படுவதும் ரிஃப்ளக்ஸ் அறிகுறியாக இருக்கலாம். பால் அல்லது உணவு கொடுத்த சிறிது நேரத்திற்குப் பிறகு நோய்வாய்ப்படும் போது, வழக்கத்தை விட அதிகமாக அழும் போது, எடை அதிகரிக்காமல் இருக்கும் போது போன்ற நிலைகளில் மருத்துவரை நாட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Pneumonia Prevention: குழந்தைக்கு நிம்மோனியா இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்.! எளிதில் சரியாக இத செய்யுங்க.
Image Source: Freepik