Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை பெறும் நன்மைகள்

குழந்தை பிறந்த உடனே தாய்ப்பால் பெறுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறுகிறது. அறிவியல் ரீதியாக, குழந்தை பெறக்கூடிய சில அற்புத நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை

ஆன்டிபாடிகள்

குழந்தைகளுக்கு இயற்கையாக தேவைப்படும் ஆன்டிபாடிகள் தாய்ப்பாலில் இருப்பதால், குழந்தைகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதிலும் குறிப்பாக தாய், குழந்தை பெற்ற பிறகு முதலாவது சுரக்கும் தாய்ப்பால் ஆனது கொலஸ்ட்ரம் எனப்படுகிறது. இந்த கொலஸ்ட்ராமில் அதிக அளவிலான இம்யூனோகுளோபுலின் மற்றும் இன்னும் பல ஆன்டிபாடிகள் உள்ளது. இது இயற்கையாகவே குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி உடல் நலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

அதிக அளவு ஊட்டச்சத்து

புதிதாக பிறந்த குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், தாய்ப்பாலில் உள்ளது. இது குழந்தைகளுக்கு செரிமானப் பாதையை உருவாக்க உதவுகிறது. தாய்ப்பாலில் வைட்டமின் டி சத்துக்கள் காணப்படுகின்றன. எனவே குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதற்கு மேல் வரையே குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரம் ஆனது அதிக அளவிலான புரதத்துடன், குறைந்த சர்க்கரை கொண்ட கலவையாக நிறைந்து காணப்படுகிறது.

நோய் அபாயங்களைக் குறைப்பதற்கு

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் மூலம் பல்வேறு நோய் தொற்று அபாயங்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, சளி ஏற்படுதல் மற்றும் தொண்டையில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் தாய்ப்பால் மூலமாக குறைவாகலாம். தாய்ப்பால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமடைகிறது. குழந்தைகளின் குடல் நோய்த் தொற்றுகளைக் குறைக்கவும் தாய்ப்பால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தையின் முகத்தில் ஏற்படும் தடிப்புகளை தடுப்பது எப்படி?

தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்

தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.

கருப்பை சுருங்க உதவுதல்

பெண்கள் கர்ப்பமாகும் சமயத்தில், கருப்பை அபரிமிதமான வளர்ச்சியை அடைகிறது. சிறிய அளவிலிருந்து வயிற்றின் முழு இடத்தையும் ஆக்கிரமிப்பதாக தாய்ப்பால் உள்ளது. பிரசவம் ஏற்படும் சமயத்தில் அதிக அளவு ஆக்ஸிடாஸின் சுரக்கப்படுகிறது. இது குழந்தை வெளியே வருவதற்கு உதவுகிறது. மேலும், இதன் மூலம் இரத்தப்போக்கு ஏற்படுவது குறைக்கப்படுகிறது.

மாதவிடாய் வராமல் தடுப்பது

மாதவிடாய் காலத்தில் பொதுவாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. அதிலும், குழந்தை பெற்ற உடனே மாதவிடாயால் அவதிப்படுவது என்பது இயலாத ஒன்று ஆகும். பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மாதவிடாயை இடைநிறுத்த முடியும்.

உடல் எடை குறைவதற்கு

பெண்கள் தாய்ப்பால் அளிக்கும் போது உடல் எடையைக் குறைப்பதற்கான வாய்ப்பையும் பெறுவர். ஏனெனில், தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அதிக அளவிலான கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே பிரசவத்திற்குப் பின் உடல் எடை குறைப்பிற்கு தாய்ப்பால் அளிக்கப்படுவதும் ஒரு காரணியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?

Image Source: Freepik

Read Next

Baby Nose Shape: குழந்தையின் மூக்கை நீவுவது மூக்கின் வடிவத்தை மாற்றுமா? உண்மை என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்