World Breastfeeding Week 2024: தாய்ப்பால் கொடுப்பதின் மகத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
World Breastfeeding Week 2024: தாய்ப்பால் கொடுப்பதின் மகத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ஏனெனில், தாய்ப்பாலூட்டுவது தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது. இதில் மருத்துவர்களும் பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என தாய்மார்களை வலியுறுத்துகின்றனர். மேலும், அமெரிக்க மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தாய்ப்பால் கொடுப்பதை ஒரு வருடம் தொடர்வது மிகவும் நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளது. இப்படிப்பட்ட தாய்ப்பாலின் மகத்துவத்தை அனைவரும் அறியவே ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Producing Foods: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

எந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது?

உலகெங்கிலும், தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு வார நினைவுகூறலானது உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF) போன்றவை 1990 களில் தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் இன்னசென்டி பிரகடனத்தை உருவாக்கியதிலிருந்து தொடங்குகிறது. 

அதன் பிறகு, 1991 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF-ன் குகளை நிறைவேற்றும் வகையில், தாய்ப்பால் கொடுப்பதற்கான உலக சங்கம் என்ற ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தை விளம்பரப்படுத்த 1992 ஆம் ஆண்டில் ஒரு வாரம் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டது. இவ்வாறே ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பொதுவாக தாய்ப்பால் கொடுப்பது நர்சிங் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், தாய்ப்பாலின் உதவியுடன் இளம் குழந்தைகளுக்கு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும். குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) தெரிவித்துள்ளது. இது பாதுகாப்பானதாகவும், சுத்தமானதாகவும் இருப்பதுடன், குழந்தைகளின் முதல் தடுப்பூசியாகவும் செயல்படுகிறது.

இதன் மூலமே குழந்தையின் நோயெதிர்ப்புச்சக்தி பலமடைந்து, பல்வேறு குழந்தை பருவ நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெறலாம் என இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், அவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்கிறது. மேலும், நீரிழிவு, ஒவ்வாமை நோய்கள், குழந்தை பருவ லுகேமியா மற்றும் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் போன்ற நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Benefits: ஆரோக்கியம் மிக்க தாய்ப்பாலும், தாய் மற்றும் சேய் பெறும் நலன்களும்.!

தாய்ப்பால் ஏன் சத்தானது?

தாயின் பிரசவத்திற்குப் பிறகு, அவர்களின் முதல் ஊட்டத்தில் அதிகளவிலான ஆக்ஸிஜனேற்றங்கள், ஆன்டி பாடிகள், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி மற்றும் அவர்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த காரணங்களுக்காகவே குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது.

தாய்ப்பாலின் சுவை மாறுமா?

உண்மையில் தாய்ப்பாலின் சுவை மாறக்கூடியதாகும். ஏனெனில், பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுவகைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பாலின் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும். குழந்தை கருவில் வளரும் போது தாய் சாப்பிடும் உணவுப்பழக்கத்திற்கு குழந்தை தன்னை தயார்படுத்தும்.

இந்த சூழ்நிலையில், குழந்தை பிறந்த பிறகு தாய் வேறு சில உணவுகளை பின்பற்றுவது, அவர்களின் தாய்ப்பாலில் மாற்றங்களைக் கொண்டுவரும். அந்த வகையில் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உணவுப்பழக்கங்கள், தாய்ப்பாலின் சுவை மாறுபடுகிறது. இதன் காரணமாகவே சில சமயங்களில் சில குழந்தைகள் பாலூட்ட முயற்சிக்கும் போது அழுவதுடன், தாய்ப்பால் குடிக்காமல் தவிர்ப்பர்.

இது போன்ற தாய்ப்பால் குறித்த ஒவ்வொரு விஷயங்களையும் தெரிந்து கொள்வதுடன், தாய் மற்றும் சேய் நலனுக்காக தாய்ப்பாலின் மகத்துவத்தை பகிரவே இந்த சிறப்பான உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் தாய்ப்பாலின் மகத்துவத்தை அறிவோம்! குழந்தைகளை வளமாக வாழ வைப்போம்!.

இந்த பதிவும் உதவலாம்: Importance Of Breastfeeding: தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், பிள்ளைக்கும் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Breastfeeding Problems: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள்

Disclaimer