$
பிறந்த குழந்தைக்கு ஆதாரமாக விளங்குவது தாய்மார்கள் அளிக்கும் தாய்ப்பால் ஆகும். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதம் வரையாவது, கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். ஏனெனில், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, தாய்ப்பாலுக்கு நிகரான வேறு எந்த சத்தும் கிடையாது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. குறிப்பாக பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாக மார்பக புற்றுநோயில் இருந்து விடுபடலாம்.
தாய்ப்பால் சுரக்க வைக்கும் உணவுப் பொருள்கள்
பெண்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளின் வெளிப்பாடாக தாய்ப்பால் சுரப்பு குறைவாத இருப்பதைக் குறிக்கலாம். இருப்பினும் இந்த சூழலுக்கு மற்ற சில காரணங்களாக தூக்கமின்மை, உணவுப்பழக்கங்கள் போன்றவை இருக்கக் கூடும். இதில் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க எடுத்துக்கொள்ள வேண்டிய சில உணவுப் பொருள்களைக் காணலாம்.
வெந்தயம்
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இது பால் சுரப்பு பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி குடிக்க தாய்ப்பால் அதிகரிக்கும். பாலுக்குப் பதிலாக, சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் குடிப்பதன் மூலமும் தாய்ப்பால் சுரக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பிள்ளையின் வயிற்று புழுக்களை நீக்க உதவும் உணவுகள்!
பிரவுன் ரைஸ்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் பிரவுன் ரைஸூம் உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பதற்கான ஹார்மானைத் தூண்டச் செய்கிறது. இந்த பிரவுன் அரிசியுடன் சத்தான காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

கீரை வகைகள்
உணவில் முக்கியமாக இருக்கக் கூடிய ஒன்றாக இருப்பது கீரை வகைகள் ஆகும். இவை பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இவற்றை கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஓட்ஸ்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஓட்ஸ் கஞ்சி குடித்தால், தாய்ப்பால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஓட்ஸில் குறைவான கொழுப்பும், அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகள்!
பூண்டு பால்
பாலூட்டும் பெண்கள் இரவில் பாலில் பூண்டு கலந்து காய்ச்சிக் குடித்து வர, தாய்ப்பால் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை அகற்றும் சக்தி பூண்டிற்கு உண்டு. இது வாயுத்தன்மையை நீக்கி வயிறு உப்புசம் அடையாமல் பாதுகாக்கிறது.

நட்ஸ்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட்ஸ், வேர்க்கடலை, பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது., இதில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
அருகம்புல் சாறு
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க அருகம்புல் சாறு உதவுகிறது. அருகம்புல் சாற்றை தேனுடன் கலந்து குடிப்பதன் மூலம் தாய்ப்பால் அதிகரிக்கிறது. மேலும், இது வயிற்றுப் புண்களை குணமாக்க உதவுகிறது. இரத்த சோகையை நீக்கி, இரத்தத்தை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Parenting Tips: குழந்தைகளைப் பொறுப்புள்ளவர்களாக வளர்ப்பது எப்படி?
முட்டை
வைட்டமின் ஏ, பி2, பி12, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை முட்டை கொண்டுள்ளது. மேலும், இது குழந்தைக்குத் தேவையான அளவு புரதங்களைக் கொடுக்கிறது. தாய்ப்பாலை அதிகரிப்பதுடன், அதன் தரத்தையும் அதிகரிக்க முட்டை உதவுகிறது. எனினும், பெண்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையின் பேரில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது.

கேரட்
உடல் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டில் உள்ள அதிக அளவிலான சத்துக்கள் தாய்ப்பால் சுரக்க வைப்பதற்கு உதவுகின்றன. மேலும், இவை குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
பேரிச்சம்பழம்
உடலில் இரத்தம் அதிகரிக்க பேரிச்சம்பழம் உதவியாக உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற சத்துக்களே இதற்கு காரணம். பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பின்னும் சாப்பிட்டு வர பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் தாய்மார்கள் சாப்பிட்டு வர, தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். மேலும், இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Avoid Food: தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?