Best Home Remedies For Increasing Breast Milk: பெண்கள் கர்ப்ப காலத்திலும், கர்ப்ப காலத்திற்கு பிறகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் பிறந்த குழந்தைக்கு ஆதாரமாக தாய்ப்பால் தருவது அவசியமாகும். ஆனால், சில புதிய தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி அதிகமாகலாம்.
இதற்கு சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். புதிய தாய்மார்களின் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிலவற்றைக் காண்போம்.
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்
பெருஞ்சீரகம்
தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சிறந்த பாரம்பரிய சிகிச்சையாக பெருஞ்சீரக விதைகள் உள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பெருங்காயத்தைத் தருவது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பெருஞ்சீரக விதைகள் செரிமானத்திற்கு உதவுகிறது. இது வயிற்றுக்கோளாறுகளைத் தணிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் பெருஞ்சீரகத்தின் நன்மைகளைப் பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Bloating Home Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? இந்த 6 பொருளில் ஒன்னு போதும்
முருங்கை சாறு
இது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சிறந்த காய்கறி ஆகும். தாய்மார்கள் முருங்கை பொரியல், சூப் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் புதிய முருங்கைக்காயை சாறாக செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் முருங்கை சாறை எடுத்துக் கொள்வது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெந்தய நீர்
அதிகளவு தாய்ப்பால் உற்பத்தி செய்வதற்கு மிகவும் பிரபலமான மூலிகை வெந்தயம் ஆகும். இது பாலூட்டும் பானங்களின் முக்கிய அங்கமாகும். இந்த வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீராக அருந்துவது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. முந்தைய நாள் இரவிலேயே வெந்தயத்தை ஒரு கிளாஸ் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அடுத்தநாள் காலையில், இந்த தண்ணீரை வடிகட்டி குடிப்பதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
எள் விதை லட்டு
பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான சிறந்த அத்தியாவசிய மினரல்களில் ஒன்று கால்சியம் ஆகும். பாலைத் தவிர, கால்சியம் நிறைந்த உணவுப் பொருள்களில் ஒன்றாக எள் விதைகள் அமைகிறது. புதிய தாய்மார்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே, பாலூட்டும் தாய்மார்கள் எள் விதைகளை சேர்த்து கொள்வது அவசியமான ஒன்றாகும். எள் விதைகளுடன், பேரீச்சம்பழம், தேங்காய் துருவல், மற்றும் நட்ஸ்களைச் சேர்த்து லட்டு தயாரித்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Itchy Skin Remedies: கோடைக்காலத்தில் சரும அரிப்பைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ
மசூர் பருப்பு சூப்
இது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகளில் சிறந்த உணவாகும். இந்த பருப்பை சூப் தயாரித்தோ அல்லது பிற உணவுகளில் சேர்த்தோ சாப்பிடலாம். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பருப்பை ஒரு பவுல் எடுத்துக் கொள்வது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த பருப்புடன் 1 சிட்டிகை மிளகு, உப்பு மற்றும் நெய் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
ராகி
இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன், தாய்மார்களின் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
பாதாம் பிசின்
தாய்மார்களின் தாய்ப்பாலை மேம்படுத்தும் சிறந்த பூஸ்டராக பாதாம் பிசின் உள்ளது. பாதாம் பிசினுடன் சுத்தமான பசு நெய், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, உலர் பழங்கள் போன்றவற்றைக் கொண்டு இந்த லட்டு தயார் செய்யப்படுகிறது. மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை வழங்குகிறது. பாதாம் பிசின் எடுத்துக் கொள்வது ஹார்மோன் சமநிலைப்படுத்த உதவுகிறது.
புதிய தாய்மார்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பாலை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Inner Knee Pain Remedies: உள் முழங்கால் வலியைக் குறைக்க உதவும் சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ
Image Source: Freepik