Breastfeeding Avoid Food: தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Breastfeeding Avoid Food: தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா?


பெண்கள் கர்ப்ப காலத்தில் எவ்வாறு பாதுகாப்புடன் செயல்படுகிறாரோ, அதே போல குழந்தை பிறந்தவுடன் பாதுகாப்பாக இருப்பதும் மிக அவசியம் ஆகும். குறிப்பாக, குழந்தையின் நலனுக்காக தாய்மார்கள் உண்ணும் உணவு போன்ற பல்வேறு விஷயங்களில் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்கள் சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதும், தவிர்ப்பதும் அவசியம்.

தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டியவை

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் எப்போதும் எடுத்துக் கொள்வது போல, சாதாரண உணவையே எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தாய்மார்கள் தங்களது உடல்நலத்துடன் குழந்தையின் உடல் நலத்தையும் பாதுகாக்கலாம். சமச்சீரான உணவும், மிதமான உணவு முறையும் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில், தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகள்!

மீன்

ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வதில் தாய்மார்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அனைத்து வகையான மீன்களிலும் பாதரசம் மிகுந்துள்ளது. இது நரம்புகளைத் தாக்குவதுடன், குழந்தையின் மூளையைப் பாதிப்பதாக அமைகிறது. எனவே தான் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது மீன்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இருப்பினும் மருத்துவரின் பரிந்துரையில் பாதரசம் குறைவாக உள்ள மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காபி

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, காபி குடிப்பது தீங்கானது என்று கூறமுடியாது. இருப்பினும குறைந்த அளவிலான காபி குடிப்பது நல்லது. பெண்கள் அதிக அளவில் காபி குடிக்கும் போது அது இரத்தத்தின் மூலம் தாய்ப்பாலில் கலந்து விடக்கூடும். இதன் காரணமாக குழந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளுக்கு இந்த 5 பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!

மசாலா உணவுகள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காரசாரமான உணவுகள் மற்றும் பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்வர். குழந்தைகள் சிறுவயது முதலே பல சுவைகளுக்கு பழக்கமாவதற்காக இது உதவுகிறது. இருப்பினும், தாய்மார்கள் மசாலாக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்ட பின்னர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

வாயு உணவுகள்

கேலக்டோகோகுகள் உணவுகள் தாய்ப்பாலை அதிகரிப்பதற்கும், பராமரிப்பதற்கும் உதவுகின்றன. புதினா போன்றவை ஆன்டி கேலக்டோகுகளாக உள்ளது. இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பதை குறைத்து விடும். எனவே, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் இந்த வாயு உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Growth In Children: குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவுப் பட்டியல் இங்கே..

Image Source: Freepik

Read Next

Oral Rehydration: காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு ORS கொடுக்கலாமா? இதன் தீமைகள் இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்