What foods to avoid bloating during periods: பெண்கள் பெரும்பாலானோர் மாதந்தோறும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் அடங்குகிறது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் அவர்கள் வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை பெண்கள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர். இதனால், அவர்களின் அன்றாட செயல்பாடுகளும் பாதிக்கப்படுகிறது. சில சமயங்களில் மாதவிடாய் காலத்தில் உண்ணும் சில உணவுகளால் வீக்கம் அல்லது வயிறு உப்புசம் போன்ற நிலைகள் ஏற்படலாம்.
இது போன்ற சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க, சில உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க முடியும். ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர்-எ நியூட்ரிஷன் அண்ட் வெல்னஸ் சென்டரின் இயக்குநரான டயட்டீஷியன் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட் அர்ச்சனா ஜெயின் அவர்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விவரித்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
மாதவிடாய் காலத்தில் வயிறு உப்புசத்தைத் தவிர்க்க எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான அர்ச்சனா ஜெயின் அவர்களின் கருத்துப்படி , பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெரும்பாலும் வயிறு உப்புசம் பிரச்சனையை சந்திக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் சில உணவுகள் இந்தப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். இது போன்ற சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நாள்பட்ட முதுகுவலியால் நீங்க இந்த பிரச்சனைகளை சந்திக்கலாம் - எப்படி குறைப்பது?
முக்கிய கட்டுரைகள்
வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
மாதவிடாய் காலத்தில், பெண்கள் பொரியல், பர்கர் போன்ற வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதை அதிகமாக உட்கொள்வதால் பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் வயிறு உப்புசம் பிரச்சனைஎதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சிலுவை காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்
சிலுவை காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானவையாக இருப்பினும், மாதவிடாயின் போது பெண்கள் இவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகளை சாப்பிடுவது பெண்களுக்கு வீக்கம், செரிமான அமைப்பு மற்றும் வயிறு உப்புசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்க வேண்டும்
மாதவிடாய் காலத்தில் வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட பிற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் வயிற்று உப்புசத்தைத் தவிர்க்கலாம். இதை அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல், மெதுவாக செரிமானம் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இவை மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளாகும்.
கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்
இந்த காலநிலையில் பெண்கள் சோடா, ஸ்பார்க்லிங் வாட்டர் மற்றும் பிற கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, செயற்கை இனிப்புகள் கொண்ட பானங்களையும் தவிர்ப்பது முக்கியம். இதனால் பெண்களுக்கு வீக்கம், வாயு உருவாக்கம் மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்குப் பதிலாக, மூலிகை தேநீர் அல்லது தண்ணீரை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிட்டா பீரியட்ஸ் சரியான நேரத்துல வரும்.. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்
பால் பொருட்களை சாப்பிட கூடாது
மாதவிடாய் காலத்தில், சில பெண்களுக்கு பால் பொருட்களை ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். இந்நிலையில், பெண்கள் பால், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதை அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் செரிமானம் பாதிக்கப்படுவதுடன் வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் சந்திக்கலாம்.
உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
இந்த காலகட்டத்தில் பெண்கள் சிப்ஸ் போன்ற அதிக உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், இவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, அதிகப்படியான வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில், குறைந்த அளவில் உப்பை உட்கொள்ளலாம்.
முடிவுரை
மாதவிடாய் காலத்தில், பெண்கள் வயிற்று வலி, தசைப்பிடிப்பு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். ஆனால், சில நேரங்களில் இந்த காலகட்டத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் வீக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது போன்ற நிலையில் மேலே கொடுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை வயிற்று உப்புசத்தை அதிகரிக்கலாம். மேலும், இந்த நேரத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்பட்டால், நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பீரியட்ஸ் சரியான நேரத்துல வரலனு கவலையா? இந்த ஒரு விதையை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
Image Source: Freepik