பீரியட்ஸ் சரியான நேரத்துல வரலனு கவலையா? இந்த ஒரு விதையை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Flaxseed benefits for irregular periods: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக சீரற்ற மாதவிடாய் அமைகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதில் மாதவிடாயை சீராக மாற்ற ஆளி விதைகள் எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை நம் அன்றாட உணவில் எப்படி சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பீரியட்ஸ் சரியான நேரத்துல வரலனு கவலையா? இந்த ஒரு விதையை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க


How to use flaxseed for irregular periods: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் அவர்களின் அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஏனெனில், இந்த காலகட்டத்திலேயே அவர்கள் வயிறு வலி, இடுப்பு வலி, முதுகு வலி என பல்வேறு உடல் உபாதைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சில பெண்கள் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சிலர் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுகின்றனர்.

பொதுவாக, மன அழுத்தம், உணவுமுறை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு காரணிகள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கக் கூடியதாக அமைகிறது. இந்நிலையில், சீரற்ற மாதவிடாய்க்கு எளிதில் தீர்வு காணும் வகையில் அன்றாட உணவில் ஆளி விதைகளைச் சேர்ப்பது நன்மை பயக்கும். ஏனெனில், இந்த சிறிய மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதைகள் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் மாதவிடாய் சுழற்சியை ஆளி விதைகள் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதையும், அதன் மற்ற நன்மைகள் குறித்தும், ஆளி விதைகளை அன்றாட உணவில் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடனே பீரியட்ஸ் ஆகணுமா? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

ஆளி விதைகள் மாதவிடாய் சுழற்சியை எவ்வாறு ஆதரிக்கிறது?

ஆளி விதைகளை சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது எவ்வாறு சீரான மாதவிடாய் சுழற்சியை ஊக்குவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், லிக்னன்கள் எனப்படும் ஒரு சேர்மமும் உள்ளது.

லிக்னன்கள் என்பது ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடிய ஒரு வகை பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகும். இது மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், ஆளி விதைகளை சாப்பிடுவது மிகவும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு பங்களிக்கிறது.

image
what-you-should-not-do-during-periods-1734425057376.jpg

ஆளி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் மற்ற நன்மைகள்

ஆளி விதைகள் அவற்றின் ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து விவரங்களுக்கு பெயர் பெற்றவையாகும். இதில் ஆளி விதைகள் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

எடையை நிர்வகிக்க

ஆளி விதைகள் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் நிறைந்தவையாக இருப்பதால், இது நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது எடை இழப்பு மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கிய மூலப்பொருளாக அமைகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த

ஆளி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதன் மூலம் திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பைத் தடுக்கலாம். இவை நீரிழிவு மேலாண்மையை ஆதரிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 15 நாள்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஆகுரீங்களா? அதற்கு என்ன காரணம் தெரியுமா? இதோ மருத்துவர் தரும் விளக்கம்

ஆளி விதைகளை எப்படி சாப்பிடலாம்?

ஆளி விதைகளை உட்கொள்வதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக, அதை தூள் வடிவில் எடுத்துக் கொள்வதாகும். இதற்கு ஆளி விதைகளை அரைத்து, பொடியை ஆறு நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சேமித்து பயன்படுத்தலாம். இவ்வாறு எடுத்துக் கொள்வது, உடல் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்ச உதவுகிறது. இதில் உணவில் ஆளி விதைகளைச் சேர்ப்பதற்கான எளிய வழிகளைக் காணலாம்.

ஆளி விதை சட்னி

ஆளி விதைகளை வறுத்து, அதில் பூண்டு, சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு போன்றவை சேர்த்து ஒரு சுவையான சட்னியை தயார் செய்யலாம். இதை வழக்கமான உணவுகளுடன் இணைப்பது நன்மை பயக்கும்.

image
is-it-good-to-eat-raw-flax-seeds-how-to-eat-raw-flax-seeds-in-healthy-way-Main-1744559576011.jpg

ரைத்தா

பூண்டு, வெள்ளரிக்காய் அல்லது புதினா போன்ற உங்களுக்குப் பிடித்த ரைத்தாவில் ஆளி விதைப் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையை பாதிக்காமல் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துகிறது.

ஸ்மூத்திகள்

ஒரு டீஸ்பூன் அரைத்த ஆளி விதைகளை காலை ஸ்மூத்தியில் சேர்ப்பது மிகுந்த நன்மை பயக்கும். இவை தயிர், வாழைப்பழங்கள் மற்றும் தேன் போன்றவற்றுடன் இணைந்து நன்றாக வேலை செய்கிறது.

இது போன்ற பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் ஆளிவிதைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், இதை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், அதிகப்படியான நுகர்வு இரைப்பை பிரச்சினைகள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Flax seeds during periods: பெண்களே தீராத மாதவிடாய் வலியால் அவதியா?  இந்த ஒரு விதை போதும்

Image Source: Freepik

Read Next

பாதாம் தோல்கள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்!

Disclaimer