What foods stop irregular periods: இன்றைய நவீன காலத்தில் பல்வேறு காரணிகளால் பெண்கள் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக ஒழுங்கற்ற மாதவிடாய் அமைகிறது. இது அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தைத் தரும் சூழலை உண்டாக்கலாம். இது ஹார்மோன் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உடலின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் பொதுவாகிவிட்டது.
இது அவர்கள் எடை அதிகரிப்பு, தோல் வெடிப்புகள், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்குகிறது. பொதுவாக, வழக்கமான மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் நடக்கக்கூடியதாகும். இது நபருக்கு நபர் மாறுபடலாம். இது ஒரு பெண்ணின் நல்ல ஆரோக்கியத்தின் முக்கிய அளவீடாக இருக்கலாம். இந்நிலையில் ஒழுங்கற்ற மாதவிடாயை நிர்வகிக்க சரியான உணவைப் பின்பற்றுவது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாயை நிர்வகிக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்
ஆயுர்வேதத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எளிமையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய மற்றும் புதிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் மாதத்தின் மற்ற நேரங்களில் ஒருவர் உட்கொள்ளும் உணவுகள் குறித்தும் கவனமாக இருப்பது முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: உடனே பீரியட்ஸ் ஆகணுமா? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால், சில நேரங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு நான் என்ன சாப்பிட வேண்டும்? என்று சிந்திப்போம். எனினும், வெறும் உணவுமுறை மட்டும் மாதவிடாய் சுழற்சியை ஒரே இரவில் சீராக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், சில உணவுகளைத் பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குத் தீர்வு காணலாம். இந்நிலையில், சில உணவுகள் மற்றும் பானங்களை அன்றாட உணவில் சேர்ப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
எள் விதைகள்
எள் விதைகள் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நல்ல மூலமாகும். இது தசை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டுவதாகவும், சமநிலையற்ற ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதை அன்றாட உணவில் சரியான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குத் தீர்வு காணலாம்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் நார்ச்சத்து, லிக்னான்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க உதவுகிறது. இதை வறுத்தோ அல்லது பொடியாகவோ, தினசரி உணவில் கலந்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.
வோக்கோசு
இது ஒரு குறைந்த கலோரி கொண்ட பச்சை மூலிகையாகும். இதில் உள்ள மிரிஸ்டிசின், சோர்வு, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றை சமாளிக்க உதவுகிறது. மேலும் இது இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டுகிறது. இதைத் தண்ணீரில் கொதிக்க கொதிக்க வைத்து தேநீராக எடுத்துக்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனையால் பெண்கள் உடலில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?
இஞ்சி மற்றும் மஞ்சள்
இவை இரண்டுமே அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். ஆயுர்வேதத்தில் இஞ்சி, மஞ்சள் இரண்டுமே மிகுந்த நன்மை பயக்கும். இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கலாம். இந்த இரண்டின் கலவை மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. இதை தினசரி உணவில் சேர்க்கலாம் அல்லது தேநீர் வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் விதை தேநீர்
இந்த மூன்று பொருள்கள் கலந்த தேநீரானது வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினைகளுக்கு உதவும் ஒரு சிறந்த தேநீர் ஆகும். உலர்ந்த இஞ்சிப் பொடியுடன் மூன்று பொருட்களையும் கலந்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து குடிப்பது உடலிலிருந்து அதிகப்படியான நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படுவதற்கு பங்களிக்கிறது. எனவே நல்ல பலன்களைப் பெற இதை ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
குறிப்புகள்
உணவுமுறையின் மூலம் மட்டும் இயற்கையாகவே வழக்கமான மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்க முடியாது. இந்த பொருட்களுடன், ஒருவர் தங்கள் உடலை நச்சு நீக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், உடலில் உள்ள நச்சுக்கள் மாதவிடாய் ஓட்டத்தைக் குறைக்கின்றன. இவை இறுதியில் உடல் வீக்கம், தோல் வெடிப்பு, முடி உதிர்தல், மனநிலை ஊசலாட்டம் மற்றும் பலவற்றிற்கு வழிவகுக்கலாம். எனவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவை எடுத்துக் கொள்வது, நடப்பது, யோகா மற்றும் தியானம் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இது கடைபிடித்த பின்னரும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டால், சரியான நோயறிதலுக்காக மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பீரியட்ஸ் சரியான நேரத்துல வரலனு கவலையா? இந்த ஒரு விதையை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
Image Source: Freepik