What foods help increase weight: அன்றாட வாழ்வில் உடல் எடை அதிகமுள்ளவர்கள் எடையைக் குறைக்கவும், எடை குறையாக உள்ளவர்கள் எடையை அதிகரிக்கவும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மட்டுமல்லாமல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களும் தங்கள் எடையை அதிகரிக்க எண்ணி ஜிம்மிற்குச் செல்வது, உணவுகளைக் கையாள்வது மற்றும் புரோட்டீன் பவுடர் சாப்பிடுவது உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர். எனினும், அவர்களின் எடை அதிகரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தில் உடல் எடையை அதிகரிக்க சில உணவுச் சேர்க்கைகள் உள்ளன. அவற்றைக் கையாள்வதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம்.
குறைவான எடையால் அதிக சோர்வு ஏற்படுமா?
குறைந்த அளவிலான எடையைக் கொண்டிருப்பவர்களுக்கு சோர்வு, பலவீனம், நோய்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கலாம். எனவே தான் எடையை அதிகரிக்க விரும்பினால் கூட, அதன் வளர்ச்சியைத் தடுப்பதாகவே அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: weight gain Tips: எலும்பும் தோலுமா இருக்கீங்களா? அப்போ இதை சாப்பிடுங்க..
எடை அதிகரிப்புக்கான ஆயுர்வேத தீர்வு
சிலர் எடையை அதிகரிக்க விரும்பி, நிறைய ரொட்டிகளைச் சாப்பிடத் தொடங்குகின்றனர். ஆனால், பசியை விட அதிகமாக சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். இந்நிலையில், உடல் எடையை அதிகரிக்க ஆயுர்வேத முறைகளைக் கையாளலாம். ஆயுர்வேத முறைப்படி, எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு வலிமையையும் தரக்கூடியதாக அமைகிறது.
எனவே பலவீனமாகத் தோன்றும் நபர்கள் மற்றும் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், ஆயுர்வேதத்தின்படி சரியான உணவு கலவையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உடலை வலுப்படுத்த மற்றும் எடையை அதிகரிக்க உதவக்கூடிய சிறந்த உணவுச் சேர்க்கைகள் குறித்து நிபுணர் பரிந்துரைத்ததைக் காண்போம்.
best-supplements-for-pcos-weight-loss-1749729846108.jpg
உடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுச் சேர்க்கைகள்
வாழைப்பழம் மற்றும் தேன்
பொதுவாக வாழைப்பழம், தேன் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தரக்கூடியதாகும். பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுகின்றனர். ஆனால், வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து, உடலுக்கு ஆற்றல் அளித்து, எடையை அதிகரிக்க உதவுகிறது.
நெய் மற்றும் ரொட்டி
நெய்யில் அதிக அளவிலான கலோரிகள் மற்றும் கொழுப்பு இருப்பதால் இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ரொட்டியும் கலோரி நிறைந்த உணவாகும். நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் ரொட்டியில் தேசி நெய்யைப் பரப்பி சாப்பிடுவது எடையை அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் தசை வளர்ச்சியை துரிதப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை அதிகரிக்க இந்த இரண்டை சாப்பிட்டாலே போதும்!
பால் மற்றும் பேரீச்சம்பழம்
பால் புரதங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது தசைகளை உருவாக்கவும், உடல் எடை அதிகரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம், பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இவை இரண்டும் எளிதில் செரிமானம் அடைகிறது. பால் மற்றும் பேரீச்சம்பழத்தை ஒன்றாகச் சேர்த்து உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
dates-morning-eat-benefits-tamil-1745688307611.jpg
தேன் மற்றும் வால்நட்ஸ்
தேனுடன் வால்நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. இது ஆரோக்கியமான மற்றும் நிலையான எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது. இவை இரண்டுமே அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இந்த உணவுச் சேர்க்கையை அன்றாட உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும்.
பால் மற்றும் மக்கானா
மக்கானாவை பாலில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கலாம். இது ஆரோக்கியமான கலோரிகள் நிறைந்த உணவுச் சேர்க்கையாகும். இந்தக் கலவை செரிமானத்தை மேம்படுத்தவும், பலவீனத்தை நீக்கி ஆற்றலைத் தரவும் வழிவகுக்கிறது. மக்கானாவில் உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் மற்றும் பிற தாதுக்களை வழங்குவதில் செயல்படுகிறது.
இந்த சேர்க்கைகளைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பைப் பெறலாம். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் போதுமான தூக்கத்தைப் பெறுவதன் மூலம் எடையை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik