உடல் எடையை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கோங்க

What foods to eat for weight gain: உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அவ்வாறு, எடை அதிகரிக்க விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உடல் எடையை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கோங்க


What kind of food is good for gaining weight: உடல் எடையைக் குறைப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதே போல, உடல் எடை அதிகரிப்பதும் கடினமானதாகவே உள்ளது. இன்று பலரும் எடை அதிகமாகி, அதிகரித்த உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். இவ்வாறு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பதற்கு பலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். இவர்களுக்கு மத்தியில், இன்னும் சிலர் உடல் எடையை அதிகரிக்க எண்ணி பல உணவுமுறைகளைக் கையாள்கின்றனர். ஏனெனில், உடல் எடை குறைப்பு காரணமாக, பலவீனமான மற்றும் மெலிந்த உடல் முழு ஆளுமையையும் கெடுத்துவிடும்.

அது மட்டுமல்லாமல், குறைந்த எடை உள்ளவர்களும் எளிதில் நோய்களைச் சந்திக்கும் அபாயம் ஏற்படலாம். இதன் காரணமாக உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பல்வேறு வகையான புரத பவுடர்கள் மற்றும் சப்ளிமெண்ட்களை உட்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால், இவை உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். எனினும், உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம். எனினும் அடிக்கடி, உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் விரைவாக எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுகிறது.

அதன் படி, உடல் எடையை அதிகரிப்பதற்கு அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தொளதொளவென உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன? நீர் எடை என்றால் என்ன?

உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

வாழைப்பழங்கள்

உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், நிச்சயமாக அன்றாட உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அதிகளவிலான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 105 கிராம் கலோரிகளும், 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. வாழைப்பழத்தை உட்கொள்வது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.

முட்டைகள்

உடல் எடையை விரைவாக அதிகரிக்க முட்டைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதில் அதிகளவிலான புரதம் நிறைந்துள்ளது. இது தசைகள் வலுப்பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, தினமும் 2 முதல் 3 முட்டைகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம், சில நாட்களில் நல்ல பலன்களைப் பெறலாம். முட்டைகளை வேகவைத்து, பொரித்து அல்லது ஆம்லெட் செய்து உட்கொள்ளலாம்.

உலர் பழங்கள்

பாதாம், முந்திரி, வால்நட்ஸ் மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதில் புரதங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான கலோரிகள் உள்ளது. அன்றாட உணவில் உலர்ந்த பழங்களைச் சேர்ப்பது ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: OMG.. உணவை தவிர்த்தால் எடை கூடுமா.?  இது தெரியாம போச்சே..

அவகேடோ

விரைவாக உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு அவகேடோவை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிகளவிலான கலோரிகள் மற்றும் கொழுப்பு காணப்படுகிறது. மேலும், இதில் போதுமான அளவில் வைட்டமின் கே, புரதம், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதை அன்றாட உணவில் சேர்ப்பது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், விரைவாக எடையை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

உருளைக்கிழங்கு

எடை அதிகரிப்பதற்கு உருளைக்கிழங்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இதில் அதிகளவிலான கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கில் தோராயமாக 36 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், 161 கலோரிகளும் உள்ளது. அன்றாட உணவில் உருளைக்கிழங்கை பல வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த, மசித்த அல்லது வறுத்த உருளைக்கிழங்கை அன்றாட உணவில் சேர்ப்பது ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rapid Weight Gain: திடீரென உடல் எடை வேகமாக அதிகரிக்க 5 முக்கிய காரணங்கள்! உங்களுக்கு தெரியாமல் நடக்கும் தவறு!

Image Source: Freepik

Read Next

தொப்பை ஒரே வாரத்தில் குறைய இதை தடவுங்க, இதை குடிங்க! 2 விஷயம் போதும்!

Disclaimer