$
Effective weight loss diet chart for vegetarians: செயலாற்ற வாழ்க்கை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் மூன்றில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். எடையை அதிகரிப்பது மிகவும் எளிமையான விஷயம். ஆனால், கூட்டிய இடையை குறைப்பது என்பது குதிரை கொம்பு. சிலர் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்று மாங்கு மாங்கு என உடற்பயிற்சி செய்வார்கள். கடுமையான டயட்டையும் பின்பற்றுவார்கள்.
இதனால் தடை இழப்பு ஏற்படுவதுடன், நாம் பலவீனமாக உணர்வோம். உடல் எடையை குறைக்கும் போது, நமது உடம்பில் இல்ல கெட்ட கொழுப்பு மட்டும் குறைய வேண்டும். சைவ உணவு உண்பவர்கள் தசை இழப்பு பிரச்சனையை அதிகம் எதிர்கொள்கின்றனர். ஏனெனில் அவர்களின் உணவில் புரதத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் தசை இழப்புடன் பலவீனமும் ஏற்படும்.
உடல் எடை குறைப்புக்கு உதவும் பிரபல ஃபிட்னஸ் குரு முகேஷ் கெலாட், சைவ உணவு உண்பவர்களுக்கான டயட் திட்டத்தை வழங்கியுள்ளார். காலை முதல் இரவு வரை அவர் கூறியுள்ள பிளானை பின்பற்றினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிமையாக குறைக்கலாம். அதனால் நீங்கள் ஒல்லியாவதுடன், தசைகளும் பிட் ஆகும். டயட்டுடன் ஸ்ட்ரென்த் டிரைனிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Blue Tea for Weight Loss: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க தினமும் இந்த டீயை குடியுங்க!
இந்த உணவு 2100 கலோரியை கொண்டது
இந்த உணவுத் திட்டத்தில் 4-5 மீல் சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் காலையிலோ அல்லது மாலையிலோ உடற்பயிற்சி செய்தாலும், உடற்பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய உணவுகளை அதற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உணவுத் திட்டம் 80-85 கிலோ எடையுள்ள ஒருவருக்கு 2100 கலோரிகளை வழங்குகிறது. உங்கள் எடை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அதற்கேற்ப கலோரிகளை மாற்றிக்கொள்ளலாம்.
காலை உணவுக்கு முன் சாப்பிட வேண்டியவை
எடை இழப்புக்கு, காலையில் எழுந்தவுடன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன குடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். எழுந்தவுடன் 2-3 கிளாஸ் தண்ணீர் மற்றும் 1 கப் கிரீன் டீ குடிக்கவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Superfoods: ஆரஞ்சு, ஆப்பிளை விட வேகமாக எடையை குறைக்க உதவும் பழங்கள்!!
சைவ உணவு உண்பவர்களுக்காண டயட் பிளான்

முதல் மீல் - உடற்பயிற்சிக்கு 2-3 மணி நேரத்திற்கு முன் சாப்பிடவும்
- 1 ஸ்கூப் புரதம் (Whey protein)
- ஓட்ஸ் 30 கிராம்
- 2 வால்நட்
2வது மீல் - உடற்பயிற்சிக்கு 1 மணி நேரத்திற்குப் பின்
- மீள் மேக்கர் 50 கிராம் (அவித்த சோயா)
- வெஜ் சாலட்
- தயிர் 200 கிராம்
3-வது மீல்
- பனீர்/டோஃபு 100 கிராம்
- வெஜ் சாலட்
- 1/4 பச்சை தேங்காய்
- சமைத்த சோயா பருப்பு அல்லது கிட்னி பீன்ஸ் 70 கிராம் (வைத்தது)
இந்த பதிவும் உதவலாம் : Belly Fat Loss: தொங்கும் தொப்பையைக் குறைக்க… இரவு இந்த 5 உணவுகள் உதவும்!
ஸ்னாக்ஸ் மற்றும் 4வது மீல்
- சிற்றுண்டியாக 2 கைப்பிடி அளவு முளை கட்டிய பயிர் மற்றும் 200 கிராம் தயிர் சாப்பிடுங்கள்.
- 100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலை (அவித்தது)
- பனீர் 70 கிராம்
- வெஜ் சாலட்
இரவு தூங்கும் முன் என்ன சாப்பிட வேண்டும்?

இரவில் தூங்கும் முன் 1 கிளாஸ் பால் மற்றும் 2 பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள். இது தவிர, நாள் முழுவதும் தினமும் 10-14 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Pic Courtesy: Freepic