எடை இழப்புக்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. உணவு மற்றும் உடற்பயிற்சியை சமநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், எந்தவொரு எடை இழப்பு பயணத்திலும் உணவு முறை முக்கியம். அதுவும் புரதம் நிறைந்த உணவுகள். விலங்கு மூலம் புரதம் கிடைகும். ஆனால் நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் என்ன செய்வது? இதற்கும் தீர்வு உண்டு.
வெறும் 8 வாரங்களில் 10 கிலோ குறைக்க உதவும், 7 நாள் சைவ உணவுத் திட்டத்தை, சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரும், எடை மேலாண்மை மற்றும் PCOS நிபுணருமான, நேஹா பரிஹார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டயட் பிளான் குறித்து முழுமையாக அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
8 வாரங்களில் 10 கிலோ எடை குறைக்க உதவும் 7 நாள் டயட் பிளான் (diet tips to lose 10kg in 8 weeks)
நாள் 1
காலை தொடக்கம் - ஓம தண்ணீர் + நட்ஸ் கலவை
காலை உணவு - கருப்பு கொண்டைக்கடலை ச்சாட்
சிற்றுண்டி - வாழைப்பழம்
மதிய உணவு - சாதம் + காய்கறி குருமா + தயிர் + சாலட்
மாலை பானம் - நீர் மோர்
இரவு உணவு - வேகவைத்த முளைகட்டிய பயிர்
தூங்கும் முன் - வெதுவெதுப்பான நீர்
மேலும் படிக்க: தயிர் பிரியர்களே.. கொஞ்சம் கவனிக்கவும்.. தயிர் தொடர்பான கட்டுக்கதைகள் இங்கே..
நாள் 2
காலை தொடக்கம் - சீரக நீர் + விதை கலவை
காலை உணவு - காய்கறிகள் கலந்த குயினோவா உப்புமா
சிற்றுண்டி - பப்பாளி
மதிய உணவு - பருப்பு + குயினோவா + வதக்கிய காய்கறிகள்
மாலை பானம் - இளநீர்
இரவு உணவு - பேசன் சில்லா + புதினா சட்னி
தூங்கும் முன் - வெதுவெதுப்பான நீர்
நாள் 3
காலை தொடக்கம் - வெதுவெதுப்பான ஓம நீர் + 5 ஊறவைத்த பாதாம்
காலை உணவு - காய்கறிகள் தூவப்பட்ட பேசன் கேரட் சில்லா
சிற்றுண்டி - 1 ஆரஞ்சு
மதிய உணவு - காய்கறி, பழுப்பு அரிசி, பாசிபருப்பு சேர்த்து செய்த கிச்சடி + வெள்ளரி ரைத்தா
ஸ்னாக்ஸ் - வறுத்த கடலை
இரவு உணவு - கம்மியான எண்ணெயில் செய்த காய்கறி குருமா + பாஜர் ரொட்டி
தூங்கும் முன் - வெதுவெதுப்பான துளசி நீர்
நாள் 4
காலை தொடக்கம் - ஓம நீர் + கலந்த விதைகள்
காலை உணவு - வேகவைத்த ராஜ்மா மக்கானா ச்சாட்
சிற்றுண்டி - 1 கொய்யா பழம்
மதிய உணவு - டோஃபு சாதம்
மாலை பானம் - நீர் மோர்
இரவு உணவு - பருப்புடன் வேகவைத்த காய்கறி + பனீர் கிரில்
தூங்கும் முன் - கிரீன் டீ
நாள் 5
காலை தொடக்கம் - துளசி மற்றும் மிளகு கலந்த நீர் + நட்ஸ் கலவை
காலை உணவு - ராகி இட்லி + சாம்பார் + தேங்காய் சட்னி
சிற்றுண்டி - 1 ஆப்பிள்
மதிய உணவு - ராஜ்மா + சாதம் + முட்டைகோஸ் பொரியல்
ஸ்னாக்ஸ் - ஆளிவிதை லட்டு
இரவு உணவு - ராகி தோசை + தக்காளி சட்னி
தூங்கும் முன் - சோம்பு, சீரகம், மல்லி கலந்த டீ
மேலும் படிக்க: Maintaining Weight Loss: உடல் எடையை குறைத்த பிறகு மீண்டும் எடை அதிகரிப்பது ஏன்?
நாள் 6
காலை தொடக்கம் - வெந்தய கீர் நீர் + விதை கலவை
காலை உணவு - ஓட்ஸ் - பனீர் ச்சிலா
சிற்றுண்டி - வாழைப்பழம்
மதிய உணவு - சாதம் + கீரை கூட்டு + தயிர் + சாலட்
ஸ்னாக்ஸ் - வேகவைத்த ராஜ்மா ச்சாட்
இரவு உணவு - பருப்பு + மில்லட் புலாவ்
தூங்கும் முன் - சோம்பு, சீரகம், மல்லி கலந்த டீ
நாள் 7
காலை தொடக்கம் - சோம்பு நீர் + பூசணி விதை
காலை உணவு - காய்கறி பேசன் - பனீர் ச்சீலா _ வேர்கடலை சட்னி
சிற்றுண்டி - பேரிக்காய்
மதிய உணவு - ராஜ்மா + குயினோவா + காய்கறிகள் கலந்த சாலட்
ஸ்னாக்ஸ் - வறுத்த கடலை
இரவு உணவு - பேங்கண் பர்த்தா + மல்டிக்ரைன் சப்பாத்தி
தூங்கும் முன் - வெதுவெதுப்பான சீரக நீர்
குறிப்பு
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல், தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
Image Source: Freepik