30 நாட்களில் 10 கிலோ எடையை குறைக்க உதவும் கம்மி பட்ஜெட் டயட் பிளான்!

வெறும் 30 நாட்களில் 10 கிலோ எடையை குறைக்கலாம் என்றால் யாருதான் இதற்கு விரும்பமாட்டார்கள். 30 நாட்களில் 10 கிலோ எடையை குறைப்பது உண்மையில் சாத்தியமா? இதற்கான டயட் பிளான் விவரத்தை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
30 நாட்களில் 10 கிலோ எடையை குறைக்க உதவும் கம்மி பட்ஜெட் டயட் பிளான்!


1 Month Diet Plan: உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உடல் எடை குறைக்கும் முயற்சியில் சிலருக்கு மட்டுமே பலன் கிடைக்கிறது, பலருக்கு பலன் கிடைப்பதில்லை. ஏணையோர் உடல் எடை குறைக்கும் முயற்சியிலேயே சோர்வடைந்து உடல் எடை குறைப்பு பயணத்தை கைவிடுகிறார்கள்.

உடல் எடை குறைப்பதற்கான முக்கிய அறிவுரை

உடல் எடை குறைப்பதற்கான முக்கிய அறிவுரை என்னவென்றால், விடாமுயற்சி என்பதுதான். எப்போதும் பின் வாங்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பலன்களை படிப்படியாக பெறுவதே ஆரோக்கியமான முடிவாக இருக்கும். அதேபோல் அனைத்து அட்வைஸ்களையும் எடுத்துக் கொள்ளாமல், சரியான வழிகளை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

மேலும் படிக்க: Excessive thirst: தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்கவில்லையா? அப்போ இதுதான் காரணம்!

30 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்

30 நாட்களில் அதாவது 1 மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க என்ன மாதிரியான டயட் பிளான் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து எடை குறைப்பு பயிற்சியாளர் அளித்த விளக்கத்தை பார்க்கலாம்.

திங்கள் கிழமை உணவுமுறை

  • காலை 10 மணிக்கு 2 துண்டுகள் தானிய ரொட்டி மற்றும் 2 வேகவைத்த முட்டை
  • மதியம் 1-2 மணிக்குள் 1 சப்பாத்தி, பச்சை பட்டாணி கிரேவி, சாலட், 1 கிண்ணம் தயிர்
  • மாலை 5 மணிக்கு ஸ்வீட் கார்ன் சாட்
  • இரவு 7-8 மணிக்கு 150 கிராம் கோழி மார்பக இறைச்சி, 1 கிண்ணத்தில் காய்கறிகள்

செவ்வாய் கிழமை உணவு முறை

  • காலை உணவு 2 ராகி தோசை மற்றும் 1/2 கிண்ணம் சாம்பார்
  • மதிய உணவு 150 கிராம் பழுப்பு அரிசி, வேகவைத்த காய்கறிகள், தயிர் மூலம் சமைக்கப்பட்ட மீன் கறி
  • மாலை சிற்றுண்டி 2 பேரீச்சம்பழம், 5 பாதாம்
  • இரவு உணவு 1 சப்பாத்தி, 150 கிராம் இறால் கறி, வறுத்த காய்கறிகள்

1-month-diet-plan- for-weight-loss

புதன் கிழமை உணவுமுறை

  • காலை உணவு வறுத்த காய்கறிகளுடன் 2 முட்டை ஆம்லெட்
  • மதிய உணவு 1 சப்பாத்தி, சன்னா மசாலா, சாலட், மோர்
  • மாலை சிற்றுண்டி வறுத்த மக்கானா
  • இரவு உணவு ஒரு கிண்ணம் மூங் தால் கிச்சடி, ஒரு பெரிய கிண்ணம் சாலட்

வியாழன் கிழமை உணவுமுறை

  • காலை உணவு 1 கிண்ணம் நறுக்கப்பட்ட பழங்களுடன் ஓட்ஸ்
  • மதிய உணவு 3/4 கிண்ணம் சாதம், மீன் குழம்பு, சாலட்
  • மாலை சிற்றுண்டி 100 கிராம் வறுக்கப்பட்ட சீஸ்
  • இரவு உணவு 1 முட்டை ஆம்லெட், வேகவைத்த காய்கறிகள்

வெள்ளிக்கிழமை உணவுமுறை

  • காலை உணவு 2 சாதம் இட்லி, 1/2 கிண்ணம் சாம்பார்
  • மதிய உணவு 1 சப்பாத்தி, 150 கிராம் கோழி கறி, 1/2 கிண்ணம் சாலட்
  • மாலை சிற்றுண்டி வேர்க்கடலை சாட்
  • இரவு உணவு 1 கிண்ணத்தில் சிக்கன் சூப் மற்றும் வேகவைத்த ப்ரோக்கோலி

சனிக்கிழமை உணவுமுறை

  • காலை உணவு பச்சை சட்னியுடன் 2 தானிய மாவு ரொட்டி
  • மதிய உணவு 150 கிராம் சிக்கன் கறி, பிரவுன் ரைஸ், கீரை சாலட்
  • மாலை சிற்றுண்டி வறுத்த பருப்பு
  • இரவு உணவு 1 சப்பாத்தி, ஏதேனும் பருவகால காய்கறி, 150 கிராம் வறுக்கப்பட்ட மீன்

ஞாயிற்றுக்கிழமை உணவுமுறை

  • காலை உணவு சிக்கன் சாண்ட்விச்
  • மதிய உணவு1/2 கிண்ணம் சிக்கன் பிரியாணி, காய்கறி சாலட்
  • மாலை சிற்றுண்டி பாலுடன் 1 கப் தேநீர் அல்லது காபி
  • இரவு உணவு வறுக்கப்பட்ட சீஸ்/டோஃபு கலந்த காய்கறிகளுடன்

healthy-diet-plan-for-lose-weight

எடை இழப்புக்கு காலையில் வெறும் வயிற்றில் என்ன குடிக்க வேண்டும்?

  • உடல் எடை இழப்புக்கு பொதுவான உணவுமுறையுடன் காலையில் வெறும் வயிற்றில் என்ன குடிக்க வேண்டும் என்பதை கவனிப்பதும் மிக முக்கியம்.
  • தேனுடன் 1 கிளாஸ் எலுமிச்சை தண்ணீர்
  • 1 கிளாஸ் வேகவைத்த சீரகம் தண்ணீர்
  • 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிக்கவும்
  • ஆம்லா சாறு குடிப்பது நல்லது

மேலும் படிக்க: எடை குறைய தினமும் இத்தனை அடிகள் நடக்கனும்..

எடை இழப்பில் கவனிக்க வேண்டியவை

எடை இழப்பு செயல்முறை கடினமானதுதான் என்றாலும் முடியாதது என்பது உண்மையல்ல. உடல் எடை இழப்புக்கு உணவு முறை என்பது மிக முக்கியமாகும். அதேபோல் மற்றொரு முக்கியமான விஷயம் உடற்பயிற்சி. உடல் செயல்பாடுகளும் உடல் எடையை குறைக்க பெருமளவு உதவியாக இருக்கும். உடற்பயிற்சி, ஜிம்மில் வொர்க் அவுட், யோகா போன்றவை செய்வதம் நல்லது.

pic courtesy: freepik

Read Next

Low calorie drinks: தொப்பைக் கொழுப்பை மாஸ் வேகத்தில் குறைக்க நீங்க அருந்த வேண்டிய குறைந்த கலோரி நிறைந்த பானங்கள்

Disclaimer