3 மாதங்களில் 15-20 கிலோவை குறைப்பது மந்திரம் அல்ல. இது அறிவியல், உத்தி மற்றும் இடைவிடாத ஒழுக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் சாத்தியமாகும். அதாவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். எப்போதும் ஒரே இடத்தில் உட்கர்ந்திருப்பது, அதிகமான குப்பை உணவுகள், துரித உணவுகள் உட்கொள்வது போன்றவை நம் உடலின் நிலமையை மோசமாக்கும்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் பருமன் பெரும் பிரச்னையாகி வருகிறது. இதற்கு நாம் ஆரோக்கியமான முறையில் உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சைவ உணவுகள் உடல் எடைய கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனுடன் சில உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம்.
நீங்கள் விரும்பும் உணவை கை விடாமல், உடற்பயிற்சியுடனும், சைவ உணவு திட்டத்துடன், 3 மாதத்தில் 15 கிலோ வரை எடையை குறைக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம்.. இந்த ஏழு நாள் சைவ உணவு திட்டத்தை 3 மாதம் பின்பற்றுங்கள் போதும்.. 3 மாசத்துல அசால்ட்டா 15 கிலோ குறைக்கலாம்.! இது குறித்து ஊட்டச்சத்து நிபுணரும், எடை மேலாண்மை மற்றும் PCOS நிபுணருமான, நேஹா பரிஹார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிகம் படித்தவை: Diet Tips: 8 வாரத்துல 10 kg அசால்ட்டா குறைக்கலாம்.. அதுக்கான டயட் இது தான்..
7 நாள் சைவ உணவு திட்டம்
நாள் 1
அதிகாலை - சூடான எலுமிச்சை-இஞ்சி தண்ணீர் + 6 ஊறவைத்த பாதாம்
காலை உணவு - குயினோவா உப்மாவுடன் காய்கறிகள் + புதினா கொத்தமல்லி சட்னி
ஸ்னாக்ஸ் - 1 கொய்யா + 1 கைப்பிடி வருத்த சூரிய காந்தி விதைகள்
மத்திய உணவு - பருப்பு + பார்லி ரொட்டி + வெள்ளரிக்காய்
சிற்றுண்டி - முளைகட்டிய தானியங்கள்
இரவு உணவு - கம்பு ரொட்டி + மீல் மேக்கர் கிரேவி
படுக்கைக்கு முன் - வெதுவெதுப்பான சோம்பு நீர்
நாள் 2
அதிகாலை - சீரக நீர் + கலவை விதைகள்
காலை உணவு - ஓட்ஸ் உப்மாவுடன் காய்கறிகள் + தயிர்
ஸ்நாக்ஸ் - 1 கொய்யா
மத்திய உணவு - கடலை பருப்பு கூட்டு + தானிய ரொட்டி + அவித்த சீரை சாலட்
சிற்றுண்டி - மசாலா மக்கானா
இரவு உணவு - டோஃபு புர்ஜி + மில்லட் ரைஸ்
படுக்கைக்கு முன் - இஞ்சி நீர்
நாள் 3
அதிகாலை - வெதுவெதுப்பான சீரகம் மற்றும் ஓம நீர் + 1 வால்நட்
காலை உணவு - வெஜிடபிள் ஓட்ஸ் ச்சீலா + புதினா சட்னி
ஸ்நாக்ஸ் - 1 பேரிக்காய்
மத்திய உணவு - வெண்டைக்காய் மசாலா + சிகப்பு அரிசி சாதம் + பீட்ரூட் சாலட்
சிற்றுண்டி - பனீர் கிரில்
இரவு உணவு - பாலக்கீரை சூப் + குயினோவா வெஜிடபிள் உப்புமா
படுக்கைக்கு முன் - வெதுவெதுப்பான துளசி நீர்
நாள் 4
அதிகாலை - வெள்ளரி நீர் + 2 வால்நட்ஸ்
காலை உணவு - ராகி கஞ்சி + கிரீக் யோகர்ட்
ஸ்நாக்ஸ் - 1 மாதுளை
மத்திய உணவு - சுரைக்காய் கறி + கம்பு ரொட்டி + பீட்ரூட் சாலட்
சிற்றுண்டி - முளைகட்டிய பச்சை பயிறு
இரவு உணவு - பாலக் டோஃபு கறி + குயினோவா
படுக்கைக்கு முன் - சோம்பு நீர்
நாள் 5
அதிகாலை - இஞ்சி எலுமிச்சை நீர் + 1 பிரெசில் நட்
காலை உணவு - மல்ட்டிகிரைன் வெஜிடபிள் சாண்ட்விஜ்
ஸ்நாக்ஸ் - 1 ஆப்பிள்
மத்திய உணவு - மில்லட் ரைஸ் + சாம்பார் + வெள்ளரி சாலட்
சிற்றுண்டி - வேகவைத்த பாசி பருப்பு
இரவு உணவு - குடைமிளகாய் கறி + கம்பு ரொட்டி
படுக்கைக்கு முன் - வெதுவெதுப்பான மஞ்சள் மற்றும் மிளகு நீர்
நாள் 6
அதிகாலை - சீரக நீர் + 1 வால்நட்
காலை உணவு - ராகி இட்லி + தேங்காய் சட்னி
ஸ்நாக்ஸ் - பப்பாளி
மத்திய உணவு - வறுத்த காய்கறிகள் + அவித்த குயினோவா + பீட்ரூட் சாலட்
சிற்றுண்டி - வறுத்த மகானா
இரவு உணவு - பனீர் புர்ஜி + கம்பு ரொட்டி
படுக்கைக்கு முன் - வெதுவெதுப்பான சீரக நீர்
நாள் 7
அதிகாலை - புதனா மற்றும் வெள்ளரி நீர் + 6 ஊறவைத்த பாதாம்
காலை உணவு - மில்லட் கஞ்சி + சியா விதை
ஸ்நாக்ஸ் - 1 வாழைப்பழம் + நெல்லிக்காய் ஜூஸ்
மத்திய உணவு - ராஜ்மா கறி + சிகப்பு அரிசி சாதம் + முட்டைகோஸ் கேரட் பொரியல்
சிற்றுண்டி - முளைத்த பருப்பு
இரவு உணவு - டோஃபு கிரில் + காய்கறி பொரியல் + குயினோவா புலாவ்
படுக்கைக்கு முன் - இஞ்சி துளசி நீர்
இதையும் படிங்க: தினமும் ஒரு கைப்பிடி கருப்பு திராட்சை சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்.!